Pages

Saturday, December 25, 2010

சங்க இலக்கியம் - திணை வகை - II

முந்தைய  பதிவில் அகத்திணையின் பிரிவுகள் மற்றும் 'குறிஞ்சி' பற்றி பார்த்தோம்.. இது, அதன் தொடர்ச்சி.. சென்ற பதிவுக்கான தொடர்புக்கு "http://thapputhaalam.blogspot.com/2010/12/i.html" செல்லுங்கள்...

முல்லைத் திணை - இருத்தலும், இருத்தல் நிமித்தமும்

காடும் காடு சார்ந்த இடமும் முல்லைக்கு உரியவை.. பெரும்பொழுது கார்காலம் மற்றும் சிறுபொழுது மாலை ஆகும். காதலர்கள் தங்களது துணையை வேண்டி காத்திருக்கும் காலம் இது.. மகாவிஷ்ணு அல்லது கிருஷ்ணன் (திணையின் கடவுள்) தனது துணையை கொணர்வான் என்று காத்திருக்கும் காலம்..

முல்லை அல்லது மல்லி இத்திணையின் மலர் ஆகும்..


எல்லை கழிய முல்லை மலரக்
கதிர் சினந் தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயிவன்
எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே.. - குறுந்தொகை - 387

இப்பாடலில் திணையினை தெளிவாக உணர்த்தும் பாடல் ஆகும்.. தலைவன் பிரிந்த காலத்தில், தலைவி தன் ஆற்றாமை குறித்து கூறும் பாடல் இது..  இதன் பொருள்:

பகல் கழிந்து முல்லை மலர்ந்தும், கதிரவனின் வெப்பம் குறைந்து தலைவன் இல்லாததால் ஏதும் செய்ய இயலாத இந்த மாலை காலத்தையும் இரவு வருவதை எண்ணி காத்திருந்தால் அந்த இரவு கடலை விட மிகவும் பெரியதாகும்..


மருதத் திணை - ஊடலும் ஊடல் நிமித்தமும்

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் ஆகும். பெரும்பொழுது ஆண்டு முழுவதும், சிறுபொழுது வைகுறு மற்றும் விடியல் ஆகும். மருதத் திணையின் கடவுள் 'இந்திரன்' ஆகும்.

மருதமரம் மற்றும் தாமரை இத்திணையின் மரம் மற்றும் மலர் ஆகும்

 
நோமென் னெஞ்சே  நோமென் னெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்த னோமென் னெஞ்சே  - குறுந்தொகை - 202

"பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்கு தூது வந்த தோழி, உன்னுடைய தலைவன் இனிய பல செய்தவர்; அவரை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்ற தோழியை மறுத்து "அவர் இனியவராயிருந்தது முன்பு; இப்போது இன்னாராயினர்" என்றாள்

மீண்டும் அடுத்த பதிவில் தொடர்வோம்










Friday, December 24, 2010

சங்க இலக்கியம் - திணை வகை - I


நிறைய தமிழ் சங்க இலக்கிய வகைகளில் 'குறிஞ்சி' 'முல்லை' என்று எல்லாம் பாடல்களின் இறுதியில் குறிப்பு இருக்கும்.. அது பற்றி ஒரு சிறு தொகுப்பு.. 

நான் சாதாரண கடைநிலைக்கும் கீழ்நிலை இலக்கிய அறிவு உள்ளவன்.. கற்றதை கடை விரித்துள்ளேன்.. பிழை காணின், திருத்திக் கொள்வேன்.. 

அன்றைய தமிழ் இலக்கியங்கள் நமது தமிழர் வாழ்வை 'அகம்' 'புறம்' என இரு வகைகளாக பிரித்துள்ளனர்.. அவை 'அகத்திணை' மற்றும் 'புறத்திணை' 

அகத்திணை - தலைவன் மற்றும் தலைவியின் உள்ளம் (அகம்) நுகரும் உணர்வுகளை சார்ந்தது.. 
புறத்திணை - பண்டைய தமிழ் மக்களின் போர், வீரம், கொடை முதலிய புறம் சார்ந்தது.. 

அகத்திணை - ஏழு பிரிவுகள் 

  1. கைக்கிளைத் திணை - ஒரு தலைக் காதல் 
  2. குறிஞ்சித் திணை - புணர்தல்
  3. பாலைத் திணை - பிரிதல் 
  4. முல்லைத் திணை - இருத்தல் 
  5. மருதத் திணை - ஊடல் 
  6. நெய்தல் திணை - இரங்கல் 
  7. பெருந்திணை - பொருந்தாக் காதல் 

 இவற்றுள் கைக்கிளை மற்றும் பெருந்திணை முறையே ஒருதலைக் காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் குறிக்கின்றன. இதனால் இவை தமிழர் வாழ்வியலில் பெருமைக்கு உரியனவாகக் கருதப்படுவது இல்லை. அகவாழ்வின் அம்சங்களாகத் தமிழ் இலக்கியங்கள் காணும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவை ஒவ்வொன்றும் ஐவகை நிலத்திணைகளில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பானவையாகக் கொண்டு இலக்கியம் செய்யப்படுதல் அக்கால வழக்கம். இதனால் பாடல்களில் எந்த பாடுபொருள் எடுத்தாளப்படுகிறதோ அதனோடு இணைந்த நிலப் பெயர் கொண்ட திணைப் பிரிவுள் அப்பாடல் அடங்கும்
  
குறிஞ்சித் திணை  - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன.கூதிர், முன்பனி என்னும் பெரும் பொழுதுகளும் யாமம் என்னும் சிறுபொழுதும் குறிஞ்சி நிலத்துக்குரிய பொழுதுகளாகும். குறிஞ்சி திணையின் கடவுள் 'முருகன்'.. "குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்' அல்லவா..

குறிஞ்சி என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அரியவகை பூ.. இதன் வெண்ணிறம் தலைவன் மற்றும் தலைவியின் காதலைக் குறிக்கும்.

நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று 
நீரினு மாரள வின்றே சாரற
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு 
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே - குறுந்தொகை -3

கரிய கொம்பினை உடைய குறிஞ்சி மலர் கொண்டு தேனை உண்டுபண்ணும் வண்டினை கொண்ட நாடன், தன் தலைவன்மீது தான் கொண்டுள்ள அன்பு நிலத்தை விடவும் வானை விடவும் உயர்ந்தது என்பது இதன் பொருள்.. 

மற்ற திணைகள் பற்றி அடுத்த பதிவில் தொடருவேன்.. 

Tuesday, December 21, 2010

மொக்கை பக்கோடா...



என்னுடைய குரு, பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய, "சூடிய மலர் சூடற்க' என்ற சிறுகதை தொகுப்புக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொழியிலும் சிறந்த இலக்கிய சேவையாற்றுபவர்களுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. தமிழில் சிறந்த இலக்கிய சேவையாற்றிய நாஞ்சில் நாடனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முலாம் பூசபடாத அவரோட எழுத்துக்கு இப்ப தான் ஒரு மரியாத கெடச்சிருக்கு..

எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு... ஊரோட சேர்ந்து கொண்டாடனும் போல இருக்கு.. எங்க அப்பாவுக்கு மரியாதை கெடச்ச மாதிரி இருக்கு..
________


கல்லூ‌ரி மாணவ‌‌ர்க‌ளி‌‌ன் ‌திடீ‌ரசாலம‌‌றியலா‌லஅ‌ண்ணாசாலை‌யி‌லகடு‌மபோ‌க்குவர‌த்தபா‌தி‌ப்பஏ‌‌ற்ப‌ட்டது.சைதாபேட்டையில் உ‌ள்ள எ‌ம்.‌சி. ‌விடு‌தி‌யி‌லத‌‌ங்‌கி‌‌யிரு‌ந்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளஇ‌ன்றகாலை ‌ந‌ந்தன‌த்த‌ி‌ல் தங்கள் விடு‌தி‌யி‌லஅடி‌ப்படவச‌திக‌ளகே‌ட்டமாணவ‌ர்‌க‌ளஇ‌ந்ம‌றிய‌லபோரா‌ட்ட‌த்த‌ி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.


இதனா‌லசெ‌ன்னஅ‌ண்ணாசாலை‌யி‌லகடு‌மபோ‌க்குவர‌த்தநெ‌ரிச‌லஏ‌ற்ப‌ட்டது. ஷங்கர் வெச்சு இன்னொரு 'முதல்வன்' எடுக்க சொல்லணும்.. நண்பன் ஒருவன் 2-3 மணி நேரம் ஊர் எல்லாம் சுத்தி பார்த்து Office வந்தான்.. ம்ம்ம்..
____________________


"ஆ.ராசாவதொலைததொடர்புததுறஅமைச்சராக்யாருமபரிந்துரசெய்யவில்லஎன்று நம்ம முதலமை‌ச்சரவிளக்கமஅளித்துள்ளார்.".. அவரு மேலும் சொல்லிகிறது இன்னானா, 'இதுக்கு முன்னால இன்னா rules follow பண்ணாங்களோ, அதே rules தான் follow பண்ணிகுறோம்.. அப்ப யாரும் கேட்காம இப்ப வந்து ஏன் கேக்குற??" ...


அவன் மலம் உண்டால், நானும் உண்பேன்.. நீ போய் அவன கேள் ... அப்படின்னு கேக்குற மாதிரி இருக்கு..
     
   

Sunday, December 19, 2010

கஜினி - A.R.Murugadoss - வெற்றியின் மந்திரம்


கஜினி.. தமிழ்-ல சூர்யாக்கு ஒரு பெரிய பிரேக் கொடுத்த படம்.. 2008 ல ஹிந்தி ல செம்ம ஹிட் படம்.. அமீர் கான் - இப்படியுமானு பேச வெச்ச படம்..

சரி அதுக்கப்புறம் அவரு 3-4 படம் பண்ணிட்டாரு, இப்ப எதுக்கு இந்த கதைன்னு நீங்க கேக்குறது புரியுது.. கதையின் நாயகன் அமீர் கான் இல்லை, A.R.முருகதாஸ்...

A.R.முருகதாஸ் வழியாக ஒரு எளிய வெற்றியின் மந்திரம்...
  1. Create Opportunity                                   - வாய்ப்புகளை உருவாக்குங்க
  2. Think Different                                          - வித்தியாசமா சிந்தியுங்க
  3. Use Opportunity                                       - வாய்ப்பை பயன்படுத்துங்க   
  4. Be Positive about the effort                      - நேர்மறைய சிந்தியுங்க
  5. Do NOT compromise on the Quality         -  தரத்தில் வளையாதே 
இப்போ இன்னும் Detailed ah போவோம்...

அமீர்கான் - சார், உங்க கஜினி படம் பார்த்தேன்.. நல்லா இருந்தது...

A.R.முருகதாஸ் - நன்றி சார்.. ... ... ... 
...
....
A.R.முருகதாஸ் - நீங்க இந்த படத்த ஹிந்தில பண்ணா நல்லா இருக்கும் சார்.. (Create Opportunity)

அமீர்கான் - இல்ல சார், இது 'சல்மான் கான்' தான் சரியா வரும்.. சூர்யா மாதிரி பாடி எல்லாம் எனக்கு செட் ஆகாது.. 

A.R.முருகதாஸ் - இல்ல சார், அவர் பண்ணால் அது mass நீங்க பண்ணால் தான் அது Class & Mass.. (Think Different)

அமீர்கான் - இல்ல சார், எனக்கு தயக்கமா இருக்கு..

A.R.முருகதாஸ் - நாம பேசுவோம் சார், உங்களால கண்டிப்பா முடியும் (Be Positive) 

அமீர்கான் - OK. நீங்க மும்பை வாங்க.. நாம பேசுவோம்... 
இப்போ படம் commit ஆயாச்சு..

A.R.முருகதாஸ் - சார். இந்த படத்துக்கு கண்டிப்பா .A.R.Rehmaan & Ravi. K. Chandran வேணும்... (Use Opportunity)

அமீர்கான் - ஓகே 

A.R.முருகதாஸ் - அப்புறம், நீங்க GYM போய் உடம்ப கவனிங்க (No Compromise on Quality)


தமிழ்-ல இருந்து அங்க போய் பொழப்ப ஓட்றது ரொம்ப கஷ்டம்ங்க.. அதுக்கு ரொம்ப 'பொறுமை' வேணும்... இது எல்லாத்தையும் விட அவர்கிட்ட இருந்து 'தன்னடக்கம்' அப்படின்னு ஒரு மிக பெரிய line item இருக்கு..  இவ்ளோ தாங்க விஷயம்.. நம்மள சுத்தி எப்பவுமே ஒரு பாடம் இருக்கு..



Friday, December 17, 2010

கொற்றவா


அமுது கடைந்தாய்
ஏகத்துக்கும்
அருளக் கடைவாய்
யாதும்
அறியா வண்ணம் இருக்க
எமை ஏன் படைத்தாய்...!!!
      

Thursday, December 16, 2010

படித்ததில் பிடித்தது - எளிய படிப்பினை



புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும், கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.

முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது. எனவே, இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.

“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துலபோய் கூலி வேலைக்கும், ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான். இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு. 2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும். இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?

அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும். அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை எவ்வாறு பாராட்டுவது

'ஈ' என இரத்தல் இழிந்தன்று: அதன் எதிர்.
'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று:
'கொள்' எனக் கொடுத்தல் உயர்ந்தன்று: அதன் எதிர்.
'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று...

I say No... What do u say?????
 
 

!!! மனமென்னும் பேய் !!!


மனம் நிலையின்றி
தன்னிலை தவறி
வழிதவறி இடன்று
நாய் போல் உழன்று
தனியே ...
தொட்ட கை சுட்டதுவும்
விட்டொழிய வழியின்றியும்
அலையும்
மனமென்னும் பேய்...


Tuesday, December 14, 2010

Quote of the Day

Life works on three premises 

I don’t like something that you like, so you don’t like me.
You don’t like something but I like it. Hence you don’t like me.
You like something, which I also like a lot and there again you don’t like me.

So anyway, there’ll always be people who dislike you. You just have to make your choices and move on.

-- Nagesh, Legendary Actor, India

Wednesday, December 1, 2010

அடைக்கும் தாழ் - படித்ததில் பிடித்தது


Cerebral Palsy  - நோய் பற்றி அதிகம் பேச தேவை இல்லை.. இங்கே தன்னம்பிக்கை பேசும்போது..

சில வாரங்களுக்கு முன் 'விகடன்'-ல 'கடவுளின் குழந்தை - நரசிம்மலு' பற்றி ஒரு கட்டுரை.. கொஞ்சம் அவர் பெயரை கூகுள் பண்ணும்போது இன்னும் கொஞ்சம் விஷயம் தெரிஞ்சது.. அது உங்கள் பார்வைக்கு...

http://srajahiyer.sulekha.com/blog/post/2007/09/greeting-cards-for-deepavali-why-not-from-this-handicapped.htm
http://www.hinduonnet.com/2004/06/12/stories/2004061211420800.htm

"என்னதான் இருந்தாலும் அன்பா அரவணைக்க ஒரு துணை அவசியம்.. அதுக்காக கேவலமா நினைக்காதீங்க.. அன்புக்காக எங்குரதுல என்னங்க கேவலம்" - கடவுளின் குழந்தை...

 அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்