Pages

Saturday, April 3, 2010

கம்ப ராமாயணம் – மாற்றான் பெருமை – ஒரு தொகுப்பு


திரு. நெல்லை கண்ணன் அவர்களின் கம்பராமாயணம் பற்றிய பேச்சினை சமீபத்தில் கேட்க நேர்ந்தது. எனக்கு இன்று கொஞ்சமேனும் உள்ள இலக்கிய பரிச்சயதுக்கு ஐயா அவர்களின் பங்கு அளவிட முடியாதது. எனக்கு பாரதியை, கம்பனை, வள்ளுவனை, இன்ன பிற அறிஞர்களை அறிவுக்களஞ்சியங்களை, அவர்களின் தமிழ் பங்களிப்பை ஐயா அவர்களின் துணை கொண்டு அறிய கூடிய வாய்ப்பை பெற்றேன்.  அவரின் மாணவன் எனும் முறையில் இந்த முயற்சி ஒரு சிறிய அன்பளிப்பு.,
இன்று தமிழ் பேசி தம்பட்டம் அடித்து கொள்ளும் அரசியலார்க்கு இந்த கட்டுரை, ஒரு எளிய அறிமுகம்.,
வாலியின் பெருமை பற்றி அனுமன் கூற்று
கால் செலாது அவன் முன்னர்; கந்தன் வேள்
வேல் செலாது அவன் மார்பில்; வென்றியான்
வால் செலாத வாய் அலது இராவணன்
கோல் செலாது; அவன் குடை செலாது அரோ
பொருள்:
வாலியின் வேகத்திற்கு முன்னதாக காற்று செல்லாது; கிரவும்சம் எனும் மலையினை தன் வேலால் பிளந்த கந்தனின் வேல் அவன் மார்பில் துளைக்காது; வெற்றியை உடையவனான அவ்வாலியின் வால் செல்லாத இடத்தில் அல்லாமல் (வால் சென்ற இடத்தில்) இராவணனது ஆட்சி செல்லாது; அந்த இராவணனது வெற்றிக் குடையும் செல்லாது.,
ராமன் உன்னை கொல்லவே வந்துள்ளான் என்ற தன் மனையாளிடம் வாலி உரைத்தது.,
‘உழைத்த வல் இரு வினைக்கு
ஊறு கான்கிலாது
அழைத்து அயர் உலகினுக்கு
அறத்தின் ஆறு எலாம்
இழைத்தவர்க்கு, இயல்பு அல
இயம்பி என் செய்தாய்?
பிழைத்தனை, பாவி!  உன்
பெண்மையால் ‘ என்றான்.
பொருள்:
தீவினை உடையவளே! வருந்திச் சேர்த்த கொடிய இருவினைகளுக்கு அழிவினை செய்யும் வழியினை காண முடியாமல் (இறைவனை அருள்வேண்டி) அழைத்து வருந்துகின்ற உலக உயிர்களுக்கு தருமத்தின் வழிகளையெல்லாம் தன் நடைமுறையால் காட்டிய அந்த ராமபிரானுக்கு பொருந்தாதவற்றை சொல்லி என்ன தவறு செய்துவிட்டாய்!. உன் பெண்மையால் இன்று நீ பிழைத்தாய்.,
ராமன் பெருமை பற்றி இராவணன் எண்ணுதல்
‘சிவனோ? அல்லன்; நான்முகன்
அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய்வரம்
எல்லாம் அடுகின்றான்;
தவனோ எண்ணின் செய்து
முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேதமுதல்
காரணன்?’ என்றான்.
பொருள்:
என்னுடைய மிகச்சிறந்த வரபலன்களை எல்லாம் அழிக்கின்றான், இந்த ராமன் சிவபெருமானை இருப்பானோ? அப்படி இரான்; திருமாலாகிய அவனாக இருப்பானோ? அப்படியும் இரான்; தவம் செய்துய் ஆற்றல் பெற்றவனாய் இருப்பானோ என்றால், இத்தகைய பேராற்றலை தவத்தால் செய்து முடிக்கும் தகுதி உடையவன் ஒருவனும் இல்லை ஆதலின் அந்தத் தொன்மையான வேதங்களுக்கெல்லாம் மூல காரணமான ஆதிப் பரம்பொருள் இவன்தானோ? என்று கூறி வியந்து பிரமித்து நின்றான்.
ராவணனின் பெருமை பற்றி கம்பர் கூற்று
வாரணம் பொருத மார்பும்,
வரையினை எடுத்த தோழும்,
நாரத முனிவர்க்கு ஏற்ப
நயம்பட உரைத்த நாவும்
தார் அணி மவுலி பத்தும்,
சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு,
வெறும் கையேடு இலங்கை புக்கான்
பொருள்:
திசையானைகளின் எதிர் சென்று போரிட்டு தந்தங்கள் துளைத்த மார்பும், கைலாயமலையை அள்ளி எடுத்த வலிமைமிகு தோளும், நாரத முனிவர் நன்று நன்று என்று ஏற்குமாறு சாம வேதத்தை இசை நயத்தோடு பாடிய நாவும், பத்து தலையில் இருந்த மணிமுடி பத்தும், தன் தவ வலிமையால் சிவபெருமானிடம் பெற்ற வாளும், தன்னிடம் என்றும் நீங்காமல் இருந்த வீரப் பண்பினையும் போர்களத்திலே போட்டுவிட்டு வெறும் கையோடு இலங்கை நகர் புகுந்தான்

Shiva Dhyanam


ISHA – Sadhguru
I have attended a couple of programs in Isha. Infact I went there to stay lonely for 2-3 days, but life changed after that. In one word, I would say it as ‘Heaven’. I couldn’t leave the place at the end of the program. During the program, I heard the following song which made me cry, the voice of the singer (!) is so tremendous as I can’t control myself.
Shiva Dhyanam
“Karpur Gauram Karunaa Avataaram,
Sansaar Saaram Bhujgendra Haaram,
Sadaa Vasantam Hridayaarvinde,
Bhavam Bhavaani Sahitam Namaami”
Meaning: I bow to that camphor-hued, white complexioned (Lord Shiva), who is Incarnation of compassion, who is the very essence of (consciousness; the knowing principle) of life (of the embodied soul); Who wears snakes as garlands, whose eternal abode is in the heart of the devotee, I bow to Him (Lord Shiva) and His consort Bhavani (Uma or Paarvati).
Karpur (camphor-hued);
Gauram (white);
Karunaa (compassion);
Avataaram (incarnation);
Sansaar (life of the embodied soul);
Saaram (essence, the knowing principle or consciousness);
Bhujagendra (wearer of snakes or who wields theSerpent power of Kundalini Shakti);
Haaram (garlands);
Sadaa (eternal);
Vasantam (resides);
Hridayaarvinde (in the heart of the devotee);
Bhavam (Lord Shiva);
Bhavaani (Uma or Paarvati);
Sahitam (together);
Namaami (I bow).
O lord, the tasks of this day, who burden I placed on you this morning, are over. It was you who made me walk, talk, think and act. I therefore place at your feet all my thoughts, words and deeds. My task is done. Receive me; I am coming back to you. Please repair my body and prepare me nicely for my next days journey.
I knew that this was sung by Sadhguru after a long period of time., ;)

Guna – Appanendrum Song


This is one of my favorite song with very intense lines.,
அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும்  பெண்ணும்
கொட்டி  வச்ச  குப்பையாக  வந்த  உடம்பு
ஞானப்பெண்ணே  குப்பையாக  வந்த  உடம்பு
அது  புத்தனென்றும்  சித்தனென்றும்  பித்தனென்றும்
ஆவதென்ன சக்கையாக  போகும்  கரும்பு
ஞானப்பெண்ணே  போகும்  கரும்பு
பந்த பாசச்செற்றில்  வந்து  விழுந்த  தேகம்
எந்த  கங்கை  ஆற்றில்  இந்த  அழுக்கு  போகும்
அப்பனென்றும் ….. (அப்பனென்றும்)
குத்தம் குறை  ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா
சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தானடா
சிவனைக்கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்தி கேட்ட மூடர்க்கேன்றும் ஞானப்பார்வை  ஏதடா
ஆதி முதல் அந்தம் உன் சொந்தம்
உன்  பந்தம்  நீ உள்ளவரைதான்
வந்து வந்து கூடும் கூத்தாடும்
விட்டோடும் ஓர் சந்தைக்கடைதான்
இதில் நீ என்ன நான் என்ன
வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத்தள்ளு
அப்பனென்றும் ….. (அப்பனென்றும்)
கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேர்த்து வச்ச பாவம் யாவும் தீரனும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனதாரடா
தட்டுக்கெட்டு ஓடும் தள்ளாடும்
எந்நாளும் உன் உள்ளக்குரங்கு
கட்டுப்பட கூடும் எப்போதும்
நீ போடு மெய்ஞான விலங்கு
மனம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக அஞ்ஞானம் அற்று விழும்
அப்பனென்றும் ….. (அப்பனென்றும்)

Correlating Words – Excellent spell


This poem’s imagery would never be properly documented. One word of hint on this poems imagery was given by Kamil Zvelebil in his Smile of Murugan. With that clue as starting point when I went though searching for the actual meaning of the imagery , it was pretty startling. Readers who saw my visual explanation last time, don’t expect it this time. This post would have some mature only content, so people who are not prepared for it please quit. I am going on to publish this not for any traffic or sensationalism but for sole reason the imagery has never been properly documented(except for the hint given by Dr.Zvelebil).

119. குறிஞ்சி
சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- சத்திநாதனார்


119.What he said
“As a little white snake
with lovely striped on its young body
troubles the jungle elephant
this slip of a girl
her teeth like sprouts of new rice
her wrists stacked with bangles
troubles me.”

Poet: Catti Natanar
Translated by A.K.Ramanujan
This poems has many layers. One layer is suitable for all readers, so I am starting with the most basic layer.
The poet has employed a direct simile the word ‘அங்கு’ means ‘like’. The beautiful simile mentioned here that Wild Elephant which is so huge and can defeat any animal is troubled by  the small snake because its very poisonous and dreadful nature, similarly the hero who is never been defeated in war is troubled by a young girl whose smile is like sprouts of new rice and with bangles in her hand.
This is the very basic level of the interpretation.
———-
Now lets move on two the second level (should confess my own interpretation, but a very valid one),
The original words in Tamil used for trouble is ‘ அணங்கு’. This word has many meanings lets see them,
அணங்கு² aṇaṅku
, n. < id. 1. Pain, affliction, suffering; வருத்தம். (திருமுரு. 289.) 2. Disease; நோய். (பிங்.) 3. Fear; அச்சம். (சூடா.) 4. Lust; மையனோய். (திவா.) 5. Killing; கொலை. (பிங்.) 6. Deity; தெய்வம். (தொல். பொ. 256.) 7. Celestial damsel; தெய்வமகள். (திவா.) 8. Demoness that takes away one’s life by awakening lust or by other means; வருத்திக் கொல்லுந் தெய்வ மகள். (குறள், 918; மணி. 6, 135.) 9. Beautiful woman, as resembling a celestial damsel; தெய்வத்திற் கொப்பான மாதர். (பிங்.) 10. Devil; பேய். துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு (பெரும்பாண். 459). 11. Dancing under religious excitement, esp. possession by Skanda; வெறி யாட்டு. 12. Low-caste person; சண்டாளன். (பிங்.) 13. Beauty; அழகு. (பிங்.) 14. Form; வடிவு அருந்திற லணங்கி னாவியர் பெருமகன் (சிறுபாண். 86). 15. Young offspring; குட்டி. ஆளியி னணங்கு மரி யின் குருளையும் (சிலப். 25, 48).

First the poet uses anangu to describe the suffering of the elephant. Second time he uses it for the girl, if you observe closely the meaning for the word Anangu ‘Demoness that takes away one’s life by awakening lust or by other means; வருத்திக் கொல்லுந் தெய்வ மகள்.’ It was usually believed the Anangu the devil would reside in the breast of the young girl. So the second layer is the poison in the snake makes the elephant terrified and the lust evoked by the beauty of the young girl evokes fear in the Thalaivan(hero).
——-
Now lets move on to the third layer, this layer would contain some mature content , so please proceed only if you want to read this.
This layer of imagery is not my imagination or interpretation. This imagery explained by both U.V Swaminathan Iyer and Dr. Kamil Zvelebil. U.V.Swaminathan Iyer just gives lot of hints around in his commentry and Dr.Zvelebil just throws the clue wide open. All I had to do want proceed in the lead and confirm and show you readers what they meant is actually true.
Lets start with the snake,
The poet describes it as young white snake with ‘vari’.
குருளை kuruḷai – Young of a snake
U.V. Swaminatha Iyer says this snake is commonly called

n. < கோதுமை +. A species of cobra with wheat-like patches; கோதுமைத்தானியம் போன்ற புள்ளியுடைய பாம்புவகை.
Doing some research I found this snake to be commonly called as Monocled cobra
SO the question becomes how the stripes(dots) can be compared to beauty of a women.
So lets analyse the word
வரி vari :
வரி¹ vari
, n. [T. vaṟi, K. bare, M. vare.] 1. cf. valī. Line, as on shells; streaks, as in timber; stripe; கோடு. நுண்ணிய வரியொடு திரண்டு . . . கண் (சீவக. 1702). 2. Ornamental marks on the breast; தொய்யில் முதலிய இரேகை. மணி வரி தைஇயும் (கலித். 76).
See the second meaning of Vari , it means ‘Ornamental marks on the breast’ – தொய்யில் முதலிய இரேகை.
So lets move deeper and see what தொய்யில் means
toyyil
, n. < id. 1. Solution of sandal for drawing figures on the breast and shoulders of women; மகளிரின் தோள் தனங்களில் வரிக்கோல மெழுதுஞ் சந்தனக்குழம்பு. தொய்யில் பொறித்த (மதுரைக். 416). 2. Figures drawn upon the breast of women with sandal solution; மகளிர் தனங்களில் சந்தனக்குழம்பால் எழுதுங்கோலம்.
This clearly shows women of sangam age were found of Body painting with Sandal paste. I researched further to find one of the figures they draw on their breast ,
n. < id. +. Outline of creeping plant drawn in sandal paste on a woman’s bosom, as an adornment; முலைமேல் எழுதுந் தொய்யில். முலைமேலே எழுதுகொடியாக எழுதி (சீவக. 850, உரை).
So this definitely indicates that the women had some body paint with sandals on their breast. So by implying the snake has stripes ‘vari’, the hero here is indirectly telling this young girl has body paint on her breast.
If you think layer ends with this  , it does not – it goes into a deeper layer -
The clue for this layer is thrown up by Dr.Zvelebil in his most famous book ‘The Smile of Murugan’
” There is also the technique of suggestion used here, or rather comparison by suggestion, which is not apparent at first sight and which requires knowledge of some cultural traits: the avvari “lovely strips” at the body of snake hint at the fair lines, stripes and/or dots(vari) which were considered to be marks of beauty on the body of a woman(particularly on her breasts and venus’ mound)”
First time I read it I felt it was Western worlds take on Indian literature – bringing an sexual content over anything Indian. But when I went ahead and re searched the word , I was in for shock.
The word in context is ‘அவ் வரி’. There is no meaning for this word combination is Tamil Lexicon. So I tried to find this word being employed in other Sangam poems.
I found two poems which employ this word combination.
Lets analyse the first one ,
Narrinai 358 by Nakkirar
பெருந்தோள் நெகிழ அவ் வரி வாடச் சிறு மெல்ஆகம் பெரும்பசப்பு ஊர”  and the urai gives an explanation
“முன்னொருபொழுது நம்முடைய பெரிய தோள் தளர்வடைய அழகிய வரி (இரேகை)கள் வாட்டமுறச் சிறிய மெல்லிய கொங்கைகளிலே பெரிய பசலை பரவ” -
n. [M. koṅka.] 1. Woman’s breast; முலை. கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள் (சிலப். 4, 49).
Translation: Once upon a time our shoulders drooped  and the paleness spread over the soft breast with beautiful swirling stripes.
From this poem it is evident that this ornamental stripe was present in the women’s breast.
There is one more poem I wish to discuss here,
Akam 117
அவ்வரி அல்குல் ஆயமும் உள்ளாள்” -
Lets examine this அவ்வரி அல்குல், the urai is given below for the two words
Urai : அழகிய வரி பொருந்திய அல்குலினையுடைய ……
Translation :  அல்குல் which had beautiful stripes.
What does அல்குல் mean?
அல்குல் alkul Pudendum muliebre; பெண்குறி. (திருக்கோ. 9.)
Google this ‘Pudendum muliebre’ for exact meaning.
These two  poem simply adds as proof to Dr.Zvelebils comment that vari means ‘marks of beauty on the body of a woman(particularly on her breasts(narrinai 358) and venus’ mound(akam 117))’
So the vari now transforms into marks of beauty on breast and venus’ mound of the women. This simply means that the Thalaivan has seen whole body of the Thalaiavi which in turn means that they have had their sexual union.
Now come to colophon of the poem “இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது
Translation : The thalaivan who is seperated from his lover after having a natural sexual union with her lover, tells this poem to his Friend.
So now you would have made the whole sense of the poem. The Thalaivan indirectly tells to his friend that he has had sexual union with his lover. The brilliance of the poet is that in a situation where he has to describe a sexual union, he brilliantly used the words to convey the meaning in very very in direct way. The whole poem talks about sexual union of the lover without actually mentioning about them any where in the poem. This is not a double meaning poems (which these days have only one meaning) , it is more of cryptic poem where the original meaning of the poem is hidden in deep under many layers and the reader has to uncover all the layers to find the true intended meaning. Each layer throws up a different meaning.
Hope readers who had patience to read the whole blog enjoyed the brilliance of this Sangam poet.
———————————————————————————————
Reference:
The Smile of Murugan: The Tamil Literature of South India by Kamil Zvelebil
Kuruntholai Urai- U.V.Swaminathan Iyer
Interior landscapes – A.K.Ramanujan
Narrinai urai – Narayana Swami iyer
Akananuru urai – Venkadasamy Natta,Kaasi Vishwanathan Chettiyar
———————————————————————————————
————————————————————————————————

பட்டினத்தார் பாடல்


உடல் கூற்று வண்ணம்
1.  ஒரு மடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும்
அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
ஊருசுரோணிதம் மீதுகலந்து
2.  பனியில்ஓர் பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து
புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடம்இதென்று
பார்வைமெய்வாய்செவி கால்கைககள் என்ற
3.  உருவமும்ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும்
நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்விழுந்து
யோகமும்வாரமும் நாளும் அறிந்து
4.  மகளிர் சேனை தரவணையாடை மண்படஉந்தி
உதைந்துகவிழ்ந்து மடமயில்கொங்கை அமுதம்அருந்தி
ஓரறிவீரறி வாகிவளர்ந்து-
5. ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட
வந்துதவழ்ந்து மடியில் இருந்து மழலைமொழிந்து
வாயஇருபோவென நாமம்விளம்ப
6. உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர்
தங்களொடுஉண்டு தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடியபாலரொ டோடிநடந்து
அஞ்சுவயதாகி விளையாடியே
7.  உயர்தருஞான குருஉபதேசம் முத்தமிழின் கலை
யும்கரைகண்டு வளர்பிறைஎன்று பலரும்விளம்ப
வாழ்பதினாறு பிராயமும்வந்து
8.  மயிர்முடிகோதி அறுபதநீல வண்டிமிர் தண்தொடை
கொண்டைபுனைந்து மணிபொன் இலங்கும் பணிகள் அணிந்து
மாகதர்போகதர் கூடிவணங்க
9. மதன சொரூபன் இவன் எனமோக மங்கையர் கண்டு
மருண்டு திரண்டு வரி விழிகொண்டு சூழிய எறிந்து
மாமயில் போல் அவர் போவதுகண்டு
10. மனது பெறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல
சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடியமாமுதல் சேரவழங்கி
11. ஒரு முதலாகி முதுபொருளாய் இருந்ததனங்களும்
வம்பில் இழந்து மதனசுகந்த விதனம்இதென்று
வாலிபகொலமும் வேறு பிரிந்து
12. வளமையும்மாறி இளமையும்மாறி வன்பல்விழுந்து இரு
கண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிராத குரோதம் அடைந்து
செங்கையினில் ஓர் தடியும் ஆகியே
13. வருவதுபோவது ஒருமுதுகூனும் மந்தியெனும்படி
குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர்வந்து
வாயறியாமல் விடாமல் மொழிந்து
14. துயில் வரும்நேரம் இருமல் பெறாது தொண்டையும் நெஞ்சமும்
உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுனையும் அழிந்து
தோகையர் பாளர்கள் கோரணி கொண்டு
15. கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடும் என்பவர்
சஞ்சலம் மிஞ்ச கலகல என்று மலசலம் வந்து
கால்வலி மேல்வழி சாரநடந்து
16. தெளிவும் இராமல் உரை தடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
உலைந்து மருண்டு திடமும் உலைந்துமிகவும் அலைந்து
தேறிநல் ஆதரவு ஏதெனநொந்து
17. மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்
என்று தெளிந்து இனி என கண்டம் இனிஎன தொந்தம்
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற
18. கடன் முறை பேசும் என உறைநாவுறங்கி விழுந்துகை
கொண்டு மொழிந்துகடைவழிகஞ்சி ஒழுகிட வந்து
பூதமும் நாலுசு வாசமும் நின்று
நெஞ்சுதடுமாரி வரும்நேரமே
19. வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு
குஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல்யம தூதர்கள் வந்து
20.  வலைகொடுவீ சி உயிர்கொடு போக மைந்தரும் வந்து
குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலம் அறிந்து
21. பழையவர்காணும் எனுமயலார்கள் பஞ்சு பறந்திட
நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்த
வேபிணம் வேக விசாரியும் என்று
22. பலரையும் ஏவி முதியவர் தரமிருந்தசவம் கழு
வும் சிலரென்று பணிதுகில் தொங்கல் களபமணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை
23. வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளைமைந்தர்
குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிடவாழ்வென வாழ்வென நொந்து
24. விறகிடமூடி அழல்கொடு போட வெந்து விழுந்து
முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீரும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே!

பாரதி


கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி” – பாரதி
 “He who writes poetry is not a poet. He whose poetry has become his life, and who has made his life his poetry – it is he who is a poet.” –பாரதி
subramanya_bharathi1





நெருப்பாய் வாழ்ந்தவன்.. வாழ்ந்து கொண்டிருபவன்.. வாழ்பவன்…
பாரதீய பெருங்கடலினுள் எனக்கு பிடித்த சிறுதுழிகள்….



அச்சமில்லை


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே


துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.




சென்றது மீளாது
சென்றதினி மீளாது மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

மனத்திற்குக் கட்டளை
பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.

தெளிவு
எல்லா மகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோ டா?-மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த்பின்
புத்தி மயக்க முண்டோ ?
உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவதுண்டோ -மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண் டோ டா?
சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால்,-மனெமே,
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ ?
செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தேவனுரைத் தனனே;-மனமே!
பொய்கருதாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்ச வரோ?
ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப் பவர்க்
கச்சமு முண்டோ டா?-மனமே!
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவ மடா!

















விடுதலைக் காதல்






ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?
நாணற்ற வார்த்தையன்றோ?வீட்டைச் சுட்டால்,
நலமான் கூரையுந்தான் எரிந்தி டாதோ?
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழு கின்றார்?
காணுகின்ற காட்சியெலாம் மறைத்து வைத்துக்
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே