Pages

Monday, January 31, 2011

குறள் மொழிமானம்
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். - 961

பொருள்: கட்டாயமாக செய்யக்கூடிய செயல்களே ஆயினும் அவற்றால் தமது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைச் செய்வதை தவிர்த்திடல் வேண்டும்

Meaning: Though needed for your life in main,
               From mean degrading acts refrain...

Friday, January 28, 2011

பொருளெனக்கு தாராயோ?புல்லரிடதிற்ப் போய்ப் பொருள் தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக் காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா 
பொருளெனக்கு தாராயோ?
- சித்தர் பாடல்

 
 
 
 

Sunday, January 23, 2011

படித்ததில் பிடித்தது - ஜீவானந்தம்


இன்று வித்தியாசமா ஒரு புக் கிடைச்சது... Actually, அது இப்போ உள்ள political situation ah  replicate ah இருந்தது.. So உங்களுக்காக,காலுக்குச் செருப்புமில்லை
கால்வயித்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோமடா - என்தோழனே
பசியற்றுப் போனோமடா!

குண்டிக்கொரு துண்டுமில்லை
கொல்வறுமை தாளவில்லை
ஒண்டக் குடிசையில்லை - என்தோழனே
 உழைதிளைத்துப் போனோமடா!

நோய்நொடிகள் வெப்புலிபோல்
நூறுவிதம் சீறுவதால்
தாய்தந்தையர் பெண்டுபிள்ளை - என்தோழனே
சாய்ந்துவிழக் கண்டோமடா!

பாலின்றி பிள்ளைஅழும் 
பட்டினியால் தாய்அழுவாள் 
வேலையின்றி நாமழுவோம் - என்தோழனே
வீடுமுச் சூடும்அழும்!

கையிலொரு காசுமில்லை
கடன்கொடுப்பர் யாருமில்லை
செய்யும்தொழில் கிட்டவில்லை - என்தோழனே
திண்டாட்டம் கொள்ளுமடா!

வாங்கிய கடன்தீர்க்க
வக்கில்லை யானாலும்
ஏங்கி இறந்துன்னவா - என்தோழனே
எங்கள்மனம் கூசுதடா !

கொச்சைப் பிழைப்பறியோம்
கொலைதிருட்டு அறியோம்
இச்சப் பேச்சறியோம் - என்தோழனே
எத்தும் புரட்டறியோம்!


கோணல்மானால் திட்டங்களால் 
கோடிகோடி யாய்க்குவித்தே 
வீணர்சிலர் கொழுக்கக்கண்டோம் - என்தோழனே
வெஞ்சினம் பொங்குதடா !!

மாடமாளி கையவர்க்கு 
மன்னர்மகு டமவர்க்கு 
வாடவ றுமைநமக்கு - என்தோழனே
வந்திடில் வாழ்வெதற்கு?

ஒன்றுபட்டுப் போர்புரிந்தே
உயர்த்துவோம் செங்கொடியை
இன்றுடன் தீருமடா - என்தோழனே
இம்சை முறைகளெல்லாம்
 
செத்த பின் 2 லட்சம் பேர் வந்தாங்களாம், வேட்டி வாங்க கூட காசில்லாம, வைத்தியம் பார்க்க காசில்லாம இறந்திருக்காரு..  காமராஜர், M.G.R உதவி செஞ்சப்ப கூட வேணாம்னு சொல்லி இருக்காரு... எப்படி ஒரு மாணிக்கத்தை தொலைசிருக்கோம் பாருங்க...
 
 

Thursday, January 20, 2011

திருக்குற்றால குறவஞ்சி - A great numerical play

திருக்குற்றால குறவஞ்சி

குற்றாலம் - பெயரில் ஈர்க்கப்பட்டு கொஞ்சம் படிக்க தொடர்ந்தேன்.. மேலும் இதன் ஆசிரியர் எங்கள் நெல்லை வட்டம் மேலகரம்.. So, என்னுடைய ஆர்வத்தில் ஆச்சர்யம் இல்லை..

இனி பாடுபொருள்

குறவஞ்சியின் துவக்கத்தில் முருகன் பற்றிய பாடல் ஒன்று 'எண்களை' வைத்து அழக்காக பின்னப்பட்டுள்ளது காணீர்...  பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில் முடியும் பாடல் நம் தமிழின் பெருமை கூறுவதாக உள்ளது.
பன்னிருகை வேல் வாங்கப் பதினொருவர் படை தாங்கப் பத்து திக்கும்
நன்னவ வீரரும் புகழ மலைகளெட்டும் கடலேழு நாடி யாடிப்
பொன்னின் முடி ஆறேந்தி அஞ்சுதலை யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த்
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே
பன்னிருகை வேல் வாங்க (12)- பன்னிரண்டு கரங்களிலும் வேல்கொண்டு

பதினொருவர் படை தாங்க - பன்னிரண்டு கரங்களிலும் வேல் கொண்டதால்  பதினோரு படைக்கலங்களையும் பதினொருவர் தாங்கிக் கொண்டார்களாம்.

பத்துத் திக்கும் - நாம் அறிந்தது எண்திசைகள் தானே.. அப்புறம் எப்படி பத்து..??? எட்டுத் திக்குகளோடு மேலும் கீழும் உள்ள இரண்டு திக்குகளையும் சேர்த்து பத்து ஆனது.. (Smart Move la)..

நன்னவ வீரரும் புகழ - பத்துத் திசைகளிலும் புகழப் படுகின்ற வீரவாகு முதலான நவவீரர்கள் என்றும் முருகப் பெருமானின் ஆற்றல் புகழ

மலைகள் எட்டும் கடலேழும் நாடி யாடி - எட்டு மலைகளிலும் ஏழு கடல்களிலும் ஏறியும் தாவியும் குதித்தும் ஓடியும் ஆடியும் விளையாடுகின்ற

பொன்னின் முடி ஆறேந்தி - ஆறு தலைகளிலும் பொன்னாலான திருமுடிகளை ஏந்திக் கொண்டிருக்கும்

அஞ்சுதலை யெனக்கொழித்து - அஞ்சுதல் என்னும் வேண்டாத பண்பை என்னிடத்தில் இருந்து ஒழித்து

புய நால்மூன்றாய்த் - நால்மூன்று பன்னிரண்டு. பன்னிரண்டு தோள்களோடும்

தன்னிருதாள் - தன்னுடைய இரண்டு திருவடிகளையும்

தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே- தருகின்ற ஒருவனாகிய முருகப் பெருமான் தம்தமிழ் எம்வழி தந்தான்...
 
 
 

Sunday, January 16, 2011

அவர் உண்ட என் நலனே - I am nomore without Him..

This is yet another favorite.. One of the best correlated words... look at the words 'அவர் உண்ட என் நலனே' .. There is nothing more to say about the total agenda of the poem.. such a loving, painful words.. rite.!!!112. குறிஞ்சி
கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள்ளர விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முறிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே
குறுந்தொகை

பிறர் கூறும் பழி மொழியை அஞ்சினால் என் காமம் மெலியும். பிறர் இழித்தல் அறும்படி அக்காமத்தை விடின் என்பால் இருப்பது நாணம் மட்டுமே. தலைவர் உண்ட எனது பெண்மை நலம்,  பெரிய களிறு உண்ணும் பொருட்டு வளைக்க, வளைந்து நிலத்திற்படாத பட்டையை உடைய ஒடிந்த கிளையை போன்றது - காண்பாய் தோழி ....

ஒரே வரியில் சொல்வதானால், ஊரார் அலர் அஞ்சி என் காமத்தை மிகுதியாக வெளிப்படுத்தாமல் உள்ளேன்..

This is in a conversation with the thalaivi with her reply to her friend, that 'I cant leave my thalaivan' and about her situation now..

"If I should fear for the public gossip, about my passion for him, it will become weak; If I give up my passion for him fully, only my womanly sense of modesty will stick on to me. My womanly beauty with which he has regaled himself, is now like a tree branch having its broken bark not fallen completely on the ground, but hanging insecurely when a mighty elephant bends down the tree in its search for its food.. understand this.. my friend... " Tuesday, January 4, 2011

பிரிவு அச்சம் - How would I leave my lady Love !!!

 
நீங்கின் சிறிது பொழுதுநில் லாஉயிர் நேரிழைக்குஇன்று
ஈங்குஇப் படிவைகில் எய்தும் பழிநமக்கு என்றுசிந்தித்து
ஓங்கல் சிலம்பிடை நின்றுஊச லாடி உயங்கும்நம்மைத்
தாங்கத் தகும்துணை யாதுகொல் லோஎன் தனிநெஞ்சமே ...
- அம்பிகாபதி

நான் பிரிந்தால் ஏந்திழை உயிர் நீப்பாள், அவ்வாறன்றி நான் இங்கேயே இருந்தால் பழி வந்து சேரும்.. இந்த நிலையில் ஊசலாடும் என்மதியைத் தாங்கி ஒருவழிபடுத்தும் துணை யாதோ??


(தலைவனும் தலைவியும் கலவி இன்பம் கண்டு தத்தம் வீடு திரும்பும் நேரம் கூடும் போது, தலைவியை விட்டு பிரியும் வழிகாணாது அஞ்சும் தலைவனது நிலை.. )


This is one of the best lines that I have read. This is a situation where Thalaivan wants to leave his lady love before someone catches them. But however, he can't leave her, thinking that she would feel ill of leaving. He is seeking help to give strength of leaving her lady love.. 
 
 

Sunday, January 2, 2011

சங்க இலக்கியம் - திணை வகை - III


முந்தைய  பதிவில் அகத்திணையின் பிரிவுகள் மற்றும் 'குறிஞ்சி', 'முல்லை',  'மருதம்' பற்றி பார்த்தோம்.. இது, அதன் தொடர்ச்சி.. சென்ற பதிவுக்கான தொடர்புக்கு "http://thapputhaalam.blogspot.com/2010/12/i.html" 
"http://thapputhaalam.blogspot.com/2010/12/ii.html" செல்லுங்கள்...


நெய்தல் திணை - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலமாகும்.. பெரும்பொழுது இளவேனில் மற்றும் முதுவேனில். சிறுபொழுது நண்பகல் ஆகும்.. வருணன் ஆகிய தெய்வம் முதலாக கடல் ஆடுதல் தொழில் நெய்தல் திணைக்கு உரிய கருப்பொருள் ஆகும்...


காமந் தாங்குமதி என்போர் தாமç
தறியலர் கொல்லோ வனைமது கையர்கொல் 
யாமெங் காதலர்க் காணே மாயிற் 
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் 
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல வில்லா குதுமே.  - குறுந்தொகை

(தலைவன் பிரிந்த காலத்தில். "நீ ஆற்றி இருத்தல் வேண்டும் என்ற தோழிக்கு முன்னிலைப் புறமொழியாக. "காமத்தின் இயல்பு அறியாத வன்கண்ணர் அதனைத் தாங்கி ஆற்ற வேண்டுமென்கின்றனர்" என்று தலைவி கூறியது.) 

பாலைத் திணை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

வறண்ட பகுதியும் அது சார்ந்த இடமும் பாலைத் திணைக்கு உரியவை. பெரும்பொழுது இளவேனில், முதுவேனில்; நண்பகல் சிறுபொழுது.. சமயமடந்தை நிலத்திற்குரிய கடவுளாக கருதப்படுகிறார்..

குறிஞ்சியும் முல்லையும் மழையின்றி பல ஆண்டுகள் இருப்பின் வன்பாலை ஆகும்: அவை மீண்டும் மலைவளம் பேரியின் முறையே குறிஞ்சியும் முல்லையும் ஆகும்;

மருதமும் நெய்தலும்  மழையின்றி பல ஆண்டுகள் இருப்பின் மென்பாலை ஆகும்: அவை மீண்டும் மலைவளம் பேரியின் முறையே மருதமும் நெய்தலும் ஆகும்; எனவே பாலைக்கு என தனியே நிலம் கிடையாது..அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்
உரவோ ருரவோ ராக
மடவ மாக மடந்தை நாமே. - குறுந்தொகை - 20

தன்னுடைய அன்பை விடிற்று பொருள்வயிற் பிரிந்த தலைவன் செய்கை அழகன்று என்று தலைவி தோழிக்கு உரைத்தது..

இவை தவிர கைக்கிளை மற்றும் பெருந்திணைஆகிய திணை வகைகள் முறையே ஒருதலைக் காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் குறிக்கின்றன. இதனால் இவை தமிழர் வாழ்வியலில் பெருமைக்கு உரியனவாகக் கருதப்படுவது இல்லை. எனவே அவை பற்றி நானும் ஏதும் விரிவாக விளிக்கவில்லை..