Pages

Sunday, January 2, 2011

சங்க இலக்கியம் - திணை வகை - III


முந்தைய  பதிவில் அகத்திணையின் பிரிவுகள் மற்றும் 'குறிஞ்சி', 'முல்லை',  'மருதம்' பற்றி பார்த்தோம்.. இது, அதன் தொடர்ச்சி.. சென்ற பதிவுக்கான தொடர்புக்கு "http://thapputhaalam.blogspot.com/2010/12/i.html" 
"http://thapputhaalam.blogspot.com/2010/12/ii.html" செல்லுங்கள்...


நெய்தல் திணை - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலமாகும்.. பெரும்பொழுது இளவேனில் மற்றும் முதுவேனில். சிறுபொழுது நண்பகல் ஆகும்.. வருணன் ஆகிய தெய்வம் முதலாக கடல் ஆடுதல் தொழில் நெய்தல் திணைக்கு உரிய கருப்பொருள் ஆகும்...


காமந் தாங்குமதி என்போர் தாமç
தறியலர் கொல்லோ வனைமது கையர்கொல் 
யாமெங் காதலர்க் காணே மாயிற் 
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் 
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல வில்லா குதுமே.  - குறுந்தொகை

(தலைவன் பிரிந்த காலத்தில். "நீ ஆற்றி இருத்தல் வேண்டும் என்ற தோழிக்கு முன்னிலைப் புறமொழியாக. "காமத்தின் இயல்பு அறியாத வன்கண்ணர் அதனைத் தாங்கி ஆற்ற வேண்டுமென்கின்றனர்" என்று தலைவி கூறியது.) 

பாலைத் திணை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

வறண்ட பகுதியும் அது சார்ந்த இடமும் பாலைத் திணைக்கு உரியவை. பெரும்பொழுது இளவேனில், முதுவேனில்; நண்பகல் சிறுபொழுது.. சமயமடந்தை நிலத்திற்குரிய கடவுளாக கருதப்படுகிறார்..

குறிஞ்சியும் முல்லையும் மழையின்றி பல ஆண்டுகள் இருப்பின் வன்பாலை ஆகும்: அவை மீண்டும் மலைவளம் பேரியின் முறையே குறிஞ்சியும் முல்லையும் ஆகும்;

மருதமும் நெய்தலும்  மழையின்றி பல ஆண்டுகள் இருப்பின் மென்பாலை ஆகும்: அவை மீண்டும் மலைவளம் பேரியின் முறையே மருதமும் நெய்தலும் ஆகும்; எனவே பாலைக்கு என தனியே நிலம் கிடையாது..



அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்
உரவோ ருரவோ ராக
மடவ மாக மடந்தை நாமே. - குறுந்தொகை - 20

தன்னுடைய அன்பை விடிற்று பொருள்வயிற் பிரிந்த தலைவன் செய்கை அழகன்று என்று தலைவி தோழிக்கு உரைத்தது..

இவை தவிர கைக்கிளை மற்றும் பெருந்திணைஆகிய திணை வகைகள் முறையே ஒருதலைக் காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் குறிக்கின்றன. இதனால் இவை தமிழர் வாழ்வியலில் பெருமைக்கு உரியனவாகக் கருதப்படுவது இல்லை. எனவே அவை பற்றி நானும் ஏதும் விரிவாக விளிக்கவில்லை..







2 comments:

அப்பாதுரை said...

எழுத்துரு சரியாகத் தெரியவில்லையே? படிக்க முடியவில்லையே?

Vela said...

ஒரே ஒரு பத்தி மட்டும் தெரியவில்லை என்று நினைக்கின்றேன் ...!! இப்போ பாருங்க...

Post a Comment