Pages

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, October 8, 2011

படித்ததில் பிடித்தது - சொல்வனம்




விடாமல் விழும் அருவியை 
ஆச்சர்யமாக பார்க்கிறாள் 
ஒருநாள் விட்டு ஒருநாள் 
குழாயில் தண்ணீர் வரும் 
நகரத்திலிருந்து வந்த
குடும்பத் தலைவி.
குளித்துவிட்டுத் 
திரும்பும்போது 
குழாயை மூடாமல்
கிளம்புவதைப்போல்
தோன்றுகிறது அவளுக்கு.
ஆளே இல்லாதபோதும் 
கொட்டிக்கொண்டிருக்கும் 
நீரின் ஓசை அவளைப் 
பைத்தியமாக அடிக்கிறது !!!

Saturday, May 7, 2011

படித்ததில் பிடித்தது - காசி ஆனந்தன் பக்கம்..



ஆணாதிக்கம்
எப்படியும் இருக்கலாம்
ஆணிண் திமிர்
திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்
அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்

பால்
என்னைத் தெய்வம் ஆக்கினாய்
சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-
உன்பால் வேறுபாடு அழுத்தமானது
சிவனுக்கு பசுப்பாலும் சக்திக்குகள்ளிபாலும்


மாவீரன்
இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்;


அரண்

என் வலகையில் ஐந்துவிரல்கள்
உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல
அறையவும்தான்


இறுதியாக.. ஆனால் இறுதி அல்ல.. 



மனிதன்

இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்....


Friday, December 17, 2010

கொற்றவா


அமுது கடைந்தாய்
ஏகத்துக்கும்
அருளக் கடைவாய்
யாதும்
அறியா வண்ணம் இருக்க
எமை ஏன் படைத்தாய்...!!!
      

Thursday, December 16, 2010

!!! மனமென்னும் பேய் !!!


மனம் நிலையின்றி
தன்னிலை தவறி
வழிதவறி இடன்று
நாய் போல் உழன்று
தனியே ...
தொட்ட கை சுட்டதுவும்
விட்டொழிய வழியின்றியும்
அலையும்
மனமென்னும் பேய்...


Friday, August 13, 2010

ஆசை


காமம் மனதை அணுஅணுவாய்ச்
சித்ரவதை செய்கிறதே..!!!
அரும்பு விழியழகும்,
குதம்பை முலையழகும்,
உரகப்படத் தல்குல் அழகும்,
'ஆவி உண்பேன்' என்குதே !!!