Just read it in one of the Isha tamil blog.. Just short, but seems more meaningful.,
சங்கரன்பிள்ளை இறக்குமதி செய்யப்பட்ட ஒரு காபி இயந்திரத்துடன் போராடிக் கொண்டு இருப்பதை, அவர் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி கவனித்தாள்.
“இந்த இயந்திரத்தை எப்படிப் பொருத்துவது என்று பற்றி ஃப்ரெஞ்ச் மொழியில் குறிப்பு அச்சிடப்பட்டு இருக்கிறது. அதன்படி செய்து பார்த்து விட்டேன். பொருத்த முடியவில்லை. இயந்திரத்தில் ஏதோ கோளாறு என்று நினைக்கிறேன்” என்றார் சங்கரன் பிள்ளை.
பணிப்பெண் பக்கத்தில் வந்தான், ஒரே முயற்சியில், அதே இயந்திரத்தை மிகச் சுலபமாகப் பொருத்திவிட்டாள்.
“எப்படி?” என்றார், சங்கரன் பிள்ளை ஆச்சர்யத்துடன்.
“எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது ஐயா. அதனால், குழப்பிக் கொள்ளவில்லை” என்றாள் அவள்.
புரிகிறதா?
நுணுக்கம் புரியாதவரைதான் எதுவும் இயலாததாகத் தோன்றும்.புரிகிறதா?
உங்களை நீங்கள் பெரிதாக நினைத்துக் கொள்ளாமல், நீங்கள் நினைப்பதுதான் சரி என்ற அகங்காரத்துடன் எதையும் அணுகாமல் இருந்தால், எந்தப் பிரச்சனை உங்களைக் கட்டிப்போட முடியும்?
0 comments:
Post a Comment