Pages

Saturday, July 31, 2010

விகடன் - ஆகஸ்ட் 'இதழ்'

விகடன் - August Edition-2010 இப்ப தான் வாங்கி வந்தேன்.. முதன் முதலாக முகம் சுழித்துக்கொண்டு.. உங்களில் நிறைய பேர் அதே நிலையில் இருக்கலாம்..

காரணம், கொடுக்கப்பட்ட இலவசம்.. 'Stayfree Napkin'... அதை நான் உபயோகப்படுத்தவும் முடியாது .. பகுந்துண்டு பல்லுயிர் ஒம்புவதும் முடியாது.. இதற்கு பதில் ஆணுறை கொடுத்தாலாவது Atleast ஒரு விழிப்புணர்வாவது கிட்டும்.. (அப்பவும் குழந்தைகள் குழம்புமே..!!!)

வேற என்ன செய்ய.. வாங்கி வரும்வழியில் யாரும் பார்க்காவண்ணம் தூர எறிந்து வந்தேன்.. இருந்தாலும் அட்டையில் அது பற்றிய அலங்கரிப்பு வேறு.. இதை வாங்கும் பெண்கள் என்ன நினைப்பார்கள்.. சாதாரண Medical Shop-ல கூட வெளியில் தெரியாவண்ணம் தான் தருவார், இங்கே கூவி கூவி விற்பனை .. 

"வாங்கிவிட்டீர்களா, இந்த வாரம் உங்கள் ஆனந்த விகடன் உடன் அழகிய 'Sanitary Napkin' இலவசம்.. இவர்களுக்கு இது கேவலமாக தெரியாதோ.. அந்த அளவுக்கு வக்கத்துப்போய் நம் பெண்டிர் அல்லவே.. 


"நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை..." வேற என்ன சொல்றது.. கமல் சொல்ற மாதிரி 'இப்டி எலாம் போனா டமில் எப்டிய்யா வாலும்' ...

சுருக்கமாக இந்த வார விகடன் 'இதழ்' ரொம்ப அலங்கரிப்பட்டு, பாலியல் தொழில் போகும் பெண் போல இருந்தது.. 

Wednesday, July 28, 2010

குறள் மொழி


ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் - குறள் - 1330

பொருள்: ஒருவருக்கொருவர் செல்லமாகச் சிணுங்கிக்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல் தான்.

Meaning: Bouderie is lovers' delight. Its delight grows when they unite...
  
  
 

Sunday, July 18, 2010

குறள் மொழிஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை - குறள் (656)


பொருள்: பசியால் துடிக்கும் தாயின் வேதனையை துடைக்க கூட, பிறர் பழிக்கும் செயல்கள் செய்ய கூடாது...

Meaning:
Though she who begot thee hungers
Shun acts denounced by ancient seers 

Tuesday, July 6, 2010

மக்களை இல்லோர் !!!

படைப்புல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் - தாம் வாழும் நாளே

புறநானூறு - பாடல் - பாண்டியன் அறிவுடைநம்பி

தமிழ் பெயர்

தமிழ் பெயர்கள்...

ஆண்                                                                                                   
பாரதி                                                                                                   
சக்தி                                                                                                     
அறிவுடைநம்பி
இன்பா
புகழேந்தி
இளவழகன்
இளமாறன்
செழியன் 
மணிமாறன்
அருண்மொழி

பெண்
பாரதி                                                                                      
சக்தி
கயல்விழி
வெண்ணிலா
இந்துமதி
பார்கவி
அருள்மொழி
நந்தினி
தேமாங்கனி

நீங்களும் உங்கள் பங்களிப்பை அளியுங்கள்...

Sunday, July 4, 2010

மண்வதை

வதைக்கப்படும்
பெண்ணுக்காக
பெண்தான்
போராட வேண்டும்;
ஒடுக்கப்படும்
தாழ்தப்பட்டவனுக்காக
தாழ்த்தப்பட்டவன்தான்
போராட வேண்டும்
என்கிறாய்
அழிக்கப்படும்
காட்டுக்காக
காடுதான்
போராட வேண்டும்
என்பாயோ?...
         - காசி ஆனந்தன்

Save trees.. Plant trees... 

அச்சமில்லை அச்சமில்லை மனமே

கெஞ்சுவதில்லை பிறர்பால்,
அவர் செயகேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை
                          - பாவலேறு பெருஞ்சித்திரனார்

Saturday, July 3, 2010

செல்வத்துப் பயன் ஈதல்

உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பின்வரும் புறநானூற்று பாடல் பற்றிய விளக்கம் வந்தபோது இதை எழுத தோன்றியது... மிக எளிதான.. வலுவான வரிகள்...

படியுங்கள்.. களியுங்கள்.. பின்தொடருங்கள்...
உண்பதும் உடுப்பதும் !!!
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவர்க்கும்,
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஒரோக்குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்பந பலவே...

Meaning: Even for the one who owns the entire universe under one tree, even for an illiterate who works hard day and night, eats thrice and wears two dress... Apart from that everything is same... So give.. give.. give for the poor..  

திருவள்ளுவர் இதனையே இவ்வாறு கூறுவார்...

பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் 
தீப்பிணி தீண்டல் அரிது 
- ஈகை (227)...

Meaning: One who shares his/her food with someone who is in need, will never suffer from hunger.. 


நல்ஆறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்எனினும் ஈதலே நன்று - - ஈகை (222)...


Meaning: Even If the money is from good source, one should not  grab others money... Even if you will become poor tomorrow, give today...

அவ்வை அருளிய 'கொன்றை வேந்தன்' 'மருந்தே ஆயினும் விருந்தோடு உண்' என்றும் கூறுகிறது....


So, செல்வத்துப் பயன் ஈதல்... வாழுங்கள் வாழ விடுங்கள்...