Pages

Showing posts with label Sangam Landscape. Show all posts
Showing posts with label Sangam Landscape. Show all posts

Sunday, January 2, 2011

சங்க இலக்கியம் - திணை வகை - III


முந்தைய  பதிவில் அகத்திணையின் பிரிவுகள் மற்றும் 'குறிஞ்சி', 'முல்லை',  'மருதம்' பற்றி பார்த்தோம்.. இது, அதன் தொடர்ச்சி.. சென்ற பதிவுக்கான தொடர்புக்கு "http://thapputhaalam.blogspot.com/2010/12/i.html" 
"http://thapputhaalam.blogspot.com/2010/12/ii.html" செல்லுங்கள்...


நெய்தல் திணை - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலமாகும்.. பெரும்பொழுது இளவேனில் மற்றும் முதுவேனில். சிறுபொழுது நண்பகல் ஆகும்.. வருணன் ஆகிய தெய்வம் முதலாக கடல் ஆடுதல் தொழில் நெய்தல் திணைக்கு உரிய கருப்பொருள் ஆகும்...


காமந் தாங்குமதி என்போர் தாமç
தறியலர் கொல்லோ வனைமது கையர்கொல் 
யாமெங் காதலர்க் காணே மாயிற் 
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் 
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல வில்லா குதுமே.  - குறுந்தொகை

(தலைவன் பிரிந்த காலத்தில். "நீ ஆற்றி இருத்தல் வேண்டும் என்ற தோழிக்கு முன்னிலைப் புறமொழியாக. "காமத்தின் இயல்பு அறியாத வன்கண்ணர் அதனைத் தாங்கி ஆற்ற வேண்டுமென்கின்றனர்" என்று தலைவி கூறியது.) 

பாலைத் திணை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

வறண்ட பகுதியும் அது சார்ந்த இடமும் பாலைத் திணைக்கு உரியவை. பெரும்பொழுது இளவேனில், முதுவேனில்; நண்பகல் சிறுபொழுது.. சமயமடந்தை நிலத்திற்குரிய கடவுளாக கருதப்படுகிறார்..

குறிஞ்சியும் முல்லையும் மழையின்றி பல ஆண்டுகள் இருப்பின் வன்பாலை ஆகும்: அவை மீண்டும் மலைவளம் பேரியின் முறையே குறிஞ்சியும் முல்லையும் ஆகும்;

மருதமும் நெய்தலும்  மழையின்றி பல ஆண்டுகள் இருப்பின் மென்பாலை ஆகும்: அவை மீண்டும் மலைவளம் பேரியின் முறையே மருதமும் நெய்தலும் ஆகும்; எனவே பாலைக்கு என தனியே நிலம் கிடையாது..



அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்
உரவோ ருரவோ ராக
மடவ மாக மடந்தை நாமே. - குறுந்தொகை - 20

தன்னுடைய அன்பை விடிற்று பொருள்வயிற் பிரிந்த தலைவன் செய்கை அழகன்று என்று தலைவி தோழிக்கு உரைத்தது..

இவை தவிர கைக்கிளை மற்றும் பெருந்திணைஆகிய திணை வகைகள் முறையே ஒருதலைக் காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் குறிக்கின்றன. இதனால் இவை தமிழர் வாழ்வியலில் பெருமைக்கு உரியனவாகக் கருதப்படுவது இல்லை. எனவே அவை பற்றி நானும் ஏதும் விரிவாக விளிக்கவில்லை..







Saturday, December 25, 2010

சங்க இலக்கியம் - திணை வகை - II

முந்தைய  பதிவில் அகத்திணையின் பிரிவுகள் மற்றும் 'குறிஞ்சி' பற்றி பார்த்தோம்.. இது, அதன் தொடர்ச்சி.. சென்ற பதிவுக்கான தொடர்புக்கு "http://thapputhaalam.blogspot.com/2010/12/i.html" செல்லுங்கள்...

முல்லைத் திணை - இருத்தலும், இருத்தல் நிமித்தமும்

காடும் காடு சார்ந்த இடமும் முல்லைக்கு உரியவை.. பெரும்பொழுது கார்காலம் மற்றும் சிறுபொழுது மாலை ஆகும். காதலர்கள் தங்களது துணையை வேண்டி காத்திருக்கும் காலம் இது.. மகாவிஷ்ணு அல்லது கிருஷ்ணன் (திணையின் கடவுள்) தனது துணையை கொணர்வான் என்று காத்திருக்கும் காலம்..

முல்லை அல்லது மல்லி இத்திணையின் மலர் ஆகும்..


எல்லை கழிய முல்லை மலரக்
கதிர் சினந் தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயிவன்
எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே.. - குறுந்தொகை - 387

இப்பாடலில் திணையினை தெளிவாக உணர்த்தும் பாடல் ஆகும்.. தலைவன் பிரிந்த காலத்தில், தலைவி தன் ஆற்றாமை குறித்து கூறும் பாடல் இது..  இதன் பொருள்:

பகல் கழிந்து முல்லை மலர்ந்தும், கதிரவனின் வெப்பம் குறைந்து தலைவன் இல்லாததால் ஏதும் செய்ய இயலாத இந்த மாலை காலத்தையும் இரவு வருவதை எண்ணி காத்திருந்தால் அந்த இரவு கடலை விட மிகவும் பெரியதாகும்..


மருதத் திணை - ஊடலும் ஊடல் நிமித்தமும்

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் ஆகும். பெரும்பொழுது ஆண்டு முழுவதும், சிறுபொழுது வைகுறு மற்றும் விடியல் ஆகும். மருதத் திணையின் கடவுள் 'இந்திரன்' ஆகும்.

மருதமரம் மற்றும் தாமரை இத்திணையின் மரம் மற்றும் மலர் ஆகும்

 
நோமென் னெஞ்சே  நோமென் னெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்த னோமென் னெஞ்சே  - குறுந்தொகை - 202

"பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்கு தூது வந்த தோழி, உன்னுடைய தலைவன் இனிய பல செய்தவர்; அவரை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்ற தோழியை மறுத்து "அவர் இனியவராயிருந்தது முன்பு; இப்போது இன்னாராயினர்" என்றாள்

மீண்டும் அடுத்த பதிவில் தொடர்வோம்










Friday, December 24, 2010

சங்க இலக்கியம் - திணை வகை - I


நிறைய தமிழ் சங்க இலக்கிய வகைகளில் 'குறிஞ்சி' 'முல்லை' என்று எல்லாம் பாடல்களின் இறுதியில் குறிப்பு இருக்கும்.. அது பற்றி ஒரு சிறு தொகுப்பு.. 

நான் சாதாரண கடைநிலைக்கும் கீழ்நிலை இலக்கிய அறிவு உள்ளவன்.. கற்றதை கடை விரித்துள்ளேன்.. பிழை காணின், திருத்திக் கொள்வேன்.. 

அன்றைய தமிழ் இலக்கியங்கள் நமது தமிழர் வாழ்வை 'அகம்' 'புறம்' என இரு வகைகளாக பிரித்துள்ளனர்.. அவை 'அகத்திணை' மற்றும் 'புறத்திணை' 

அகத்திணை - தலைவன் மற்றும் தலைவியின் உள்ளம் (அகம்) நுகரும் உணர்வுகளை சார்ந்தது.. 
புறத்திணை - பண்டைய தமிழ் மக்களின் போர், வீரம், கொடை முதலிய புறம் சார்ந்தது.. 

அகத்திணை - ஏழு பிரிவுகள் 

  1. கைக்கிளைத் திணை - ஒரு தலைக் காதல் 
  2. குறிஞ்சித் திணை - புணர்தல்
  3. பாலைத் திணை - பிரிதல் 
  4. முல்லைத் திணை - இருத்தல் 
  5. மருதத் திணை - ஊடல் 
  6. நெய்தல் திணை - இரங்கல் 
  7. பெருந்திணை - பொருந்தாக் காதல் 

 இவற்றுள் கைக்கிளை மற்றும் பெருந்திணை முறையே ஒருதலைக் காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் குறிக்கின்றன. இதனால் இவை தமிழர் வாழ்வியலில் பெருமைக்கு உரியனவாகக் கருதப்படுவது இல்லை. அகவாழ்வின் அம்சங்களாகத் தமிழ் இலக்கியங்கள் காணும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவை ஒவ்வொன்றும் ஐவகை நிலத்திணைகளில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பானவையாகக் கொண்டு இலக்கியம் செய்யப்படுதல் அக்கால வழக்கம். இதனால் பாடல்களில் எந்த பாடுபொருள் எடுத்தாளப்படுகிறதோ அதனோடு இணைந்த நிலப் பெயர் கொண்ட திணைப் பிரிவுள் அப்பாடல் அடங்கும்
  
குறிஞ்சித் திணை  - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன.கூதிர், முன்பனி என்னும் பெரும் பொழுதுகளும் யாமம் என்னும் சிறுபொழுதும் குறிஞ்சி நிலத்துக்குரிய பொழுதுகளாகும். குறிஞ்சி திணையின் கடவுள் 'முருகன்'.. "குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்' அல்லவா..

குறிஞ்சி என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அரியவகை பூ.. இதன் வெண்ணிறம் தலைவன் மற்றும் தலைவியின் காதலைக் குறிக்கும்.

நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று 
நீரினு மாரள வின்றே சாரற
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு 
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே - குறுந்தொகை -3

கரிய கொம்பினை உடைய குறிஞ்சி மலர் கொண்டு தேனை உண்டுபண்ணும் வண்டினை கொண்ட நாடன், தன் தலைவன்மீது தான் கொண்டுள்ள அன்பு நிலத்தை விடவும் வானை விடவும் உயர்ந்தது என்பது இதன் பொருள்.. 

மற்ற திணைகள் பற்றி அடுத்த பதிவில் தொடருவேன்..