முந்தைய பதிவில் அகத்திணையின் பிரிவுகள் மற்றும் 'குறிஞ்சி' பற்றி பார்த்தோம்.. இது, அதன் தொடர்ச்சி.. சென்ற பதிவுக்கான தொடர்புக்கு "http://thapputhaalam.blogspot.com/2010/12/i.html" செல்லுங்கள்...
முல்லைத் திணை - இருத்தலும், இருத்தல் நிமித்தமும்
காடும் காடு சார்ந்த இடமும் முல்லைக்கு உரியவை.. பெரும்பொழுது கார்காலம் மற்றும் சிறுபொழுது மாலை ஆகும். காதலர்கள் தங்களது துணையை வேண்டி காத்திருக்கும் காலம் இது.. மகாவிஷ்ணு அல்லது கிருஷ்ணன் (திணையின் கடவுள்) தனது துணையை கொணர்வான் என்று காத்திருக்கும் காலம்..
முல்லை அல்லது மல்லி இத்திணையின் மலர் ஆகும்..
எல்லை கழிய முல்லை மலரக்
கதிர் சினந் தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயிவன்
எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே.. - குறுந்தொகை - 387
இப்பாடலில் திணையினை தெளிவாக உணர்த்தும் பாடல் ஆகும்.. தலைவன் பிரிந்த காலத்தில், தலைவி தன் ஆற்றாமை குறித்து கூறும் பாடல் இது.. இதன் பொருள்:
பகல் கழிந்து முல்லை மலர்ந்தும், கதிரவனின் வெப்பம் குறைந்து தலைவன் இல்லாததால் ஏதும் செய்ய இயலாத இந்த மாலை காலத்தையும் இரவு வருவதை எண்ணி காத்திருந்தால் அந்த இரவு கடலை விட மிகவும் பெரியதாகும்..
மருதத் திணை - ஊடலும் ஊடல் நிமித்தமும்
வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் ஆகும். பெரும்பொழுது ஆண்டு முழுவதும், சிறுபொழுது வைகுறு மற்றும் விடியல் ஆகும். மருதத் திணையின் கடவுள் 'இந்திரன்' ஆகும்.
மருதமரம் மற்றும் தாமரை இத்திணையின் மரம் மற்றும் மலர் ஆகும்
நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்த னோமென் னெஞ்சே - குறுந்தொகை - 202
"பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்கு தூது வந்த தோழி, உன்னுடைய தலைவன் இனிய பல செய்தவர்; அவரை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்ற தோழியை மறுத்து "அவர் இனியவராயிருந்தது முன்பு; இப்போது இன்னாராயினர்" என்றாள்
மீண்டும் அடுத்த பதிவில் தொடர்வோம்
0 comments:
Post a Comment