விடாமல் விழும் அருவியை 
ஆச்சர்யமாக பார்க்கிறாள் 
ஒருநாள் விட்டு ஒருநாள் 
குழாயில் தண்ணீர் வரும் 
நகரத்திலிருந்து வந்த
குடும்பத் தலைவி.
குளித்துவிட்டுத் 
திரும்பும்போது 
குழாயை மூடாமல்
கிளம்புவதைப்போல்
தோன்றுகிறது அவளுக்கு.
ஆளே இல்லாதபோதும் 
கொட்டிக்கொண்டிருக்கும் 
நீரின் ஓசை அவளைப் 
பைத்தியமாக அடிக்கிறது !!!


0 comments:
Post a Comment