Pages

Sunday, January 23, 2011

படித்ததில் பிடித்தது - ஜீவானந்தம்


இன்று வித்தியாசமா ஒரு புக் கிடைச்சது... Actually, அது இப்போ உள்ள political situation ah  replicate ah இருந்தது.. So உங்களுக்காக,



காலுக்குச் செருப்புமில்லை
கால்வயித்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோமடா - என்தோழனே
பசியற்றுப் போனோமடா!

குண்டிக்கொரு துண்டுமில்லை
கொல்வறுமை தாளவில்லை
ஒண்டக் குடிசையில்லை - என்தோழனே
 உழைதிளைத்துப் போனோமடா!

நோய்நொடிகள் வெப்புலிபோல்
நூறுவிதம் சீறுவதால்
தாய்தந்தையர் பெண்டுபிள்ளை - என்தோழனே
சாய்ந்துவிழக் கண்டோமடா!

பாலின்றி பிள்ளைஅழும் 
பட்டினியால் தாய்அழுவாள் 
வேலையின்றி நாமழுவோம் - என்தோழனே
வீடுமுச் சூடும்அழும்!

கையிலொரு காசுமில்லை
கடன்கொடுப்பர் யாருமில்லை
செய்யும்தொழில் கிட்டவில்லை - என்தோழனே
திண்டாட்டம் கொள்ளுமடா!

வாங்கிய கடன்தீர்க்க
வக்கில்லை யானாலும்
ஏங்கி இறந்துன்னவா - என்தோழனே
எங்கள்மனம் கூசுதடா !

கொச்சைப் பிழைப்பறியோம்
கொலைதிருட்டு அறியோம்
இச்சப் பேச்சறியோம் - என்தோழனே
எத்தும் புரட்டறியோம்!


கோணல்மானால் திட்டங்களால் 
கோடிகோடி யாய்க்குவித்தே 
வீணர்சிலர் கொழுக்கக்கண்டோம் - என்தோழனே
வெஞ்சினம் பொங்குதடா !!

மாடமாளி கையவர்க்கு 
மன்னர்மகு டமவர்க்கு 
வாடவ றுமைநமக்கு - என்தோழனே
வந்திடில் வாழ்வெதற்கு?

ஒன்றுபட்டுப் போர்புரிந்தே
உயர்த்துவோம் செங்கொடியை
இன்றுடன் தீருமடா - என்தோழனே
இம்சை முறைகளெல்லாம்
 
செத்த பின் 2 லட்சம் பேர் வந்தாங்களாம், வேட்டி வாங்க கூட காசில்லாம, வைத்தியம் பார்க்க காசில்லாம இறந்திருக்காரு..  காமராஜர், M.G.R உதவி செஞ்சப்ப கூட வேணாம்னு சொல்லி இருக்காரு... எப்படி ஒரு மாணிக்கத்தை தொலைசிருக்கோம் பாருங்க...
 
 

0 comments:

Post a Comment