Pages

Thursday, January 20, 2011

திருக்குற்றால குறவஞ்சி - A great numerical play

திருக்குற்றால குறவஞ்சி

குற்றாலம் - பெயரில் ஈர்க்கப்பட்டு கொஞ்சம் படிக்க தொடர்ந்தேன்.. மேலும் இதன் ஆசிரியர் எங்கள் நெல்லை வட்டம் மேலகரம்.. So, என்னுடைய ஆர்வத்தில் ஆச்சர்யம் இல்லை..

இனி பாடுபொருள்

குறவஞ்சியின் துவக்கத்தில் முருகன் பற்றிய பாடல் ஒன்று 'எண்களை' வைத்து அழக்காக பின்னப்பட்டுள்ளது காணீர்...  பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில் முடியும் பாடல் நம் தமிழின் பெருமை கூறுவதாக உள்ளது.
பன்னிருகை வேல் வாங்கப் பதினொருவர் படை தாங்கப் பத்து திக்கும்
நன்னவ வீரரும் புகழ மலைகளெட்டும் கடலேழு நாடி யாடிப்
பொன்னின் முடி ஆறேந்தி அஞ்சுதலை யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த்
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே
பன்னிருகை வேல் வாங்க (12)- பன்னிரண்டு கரங்களிலும் வேல்கொண்டு

பதினொருவர் படை தாங்க - பன்னிரண்டு கரங்களிலும் வேல் கொண்டதால்  பதினோரு படைக்கலங்களையும் பதினொருவர் தாங்கிக் கொண்டார்களாம்.

பத்துத் திக்கும் - நாம் அறிந்தது எண்திசைகள் தானே.. அப்புறம் எப்படி பத்து..??? எட்டுத் திக்குகளோடு மேலும் கீழும் உள்ள இரண்டு திக்குகளையும் சேர்த்து பத்து ஆனது.. (Smart Move la)..

நன்னவ வீரரும் புகழ - பத்துத் திசைகளிலும் புகழப் படுகின்ற வீரவாகு முதலான நவவீரர்கள் என்றும் முருகப் பெருமானின் ஆற்றல் புகழ

மலைகள் எட்டும் கடலேழும் நாடி யாடி - எட்டு மலைகளிலும் ஏழு கடல்களிலும் ஏறியும் தாவியும் குதித்தும் ஓடியும் ஆடியும் விளையாடுகின்ற

பொன்னின் முடி ஆறேந்தி - ஆறு தலைகளிலும் பொன்னாலான திருமுடிகளை ஏந்திக் கொண்டிருக்கும்

அஞ்சுதலை யெனக்கொழித்து - அஞ்சுதல் என்னும் வேண்டாத பண்பை என்னிடத்தில் இருந்து ஒழித்து

புய நால்மூன்றாய்த் - நால்மூன்று பன்னிரண்டு. பன்னிரண்டு தோள்களோடும்

தன்னிருதாள் - தன்னுடைய இரண்டு திருவடிகளையும்

தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே- தருகின்ற ஒருவனாகிய முருகப் பெருமான் தம்தமிழ் எம்வழி தந்தான்...
 
 
 

0 comments:

Post a Comment