விகடன் - August Edition-2010 இப்ப தான் வாங்கி வந்தேன்.. முதன் முதலாக முகம் சுழித்துக்கொண்டு.. உங்களில் நிறைய பேர் அதே நிலையில் இருக்கலாம்..
காரணம், கொடுக்கப்பட்ட இலவசம்.. 'Stayfree Napkin'... அதை நான் உபயோகப்படுத்தவும் முடியாது .. பகுந்துண்டு பல்லுயிர் ஒம்புவதும் முடியாது.. இதற்கு பதில் ஆணுறை கொடுத்தாலாவது Atleast ஒரு விழிப்புணர்வாவது கிட்டும்.. (அப்பவும் குழந்தைகள் குழம்புமே..!!!)
வேற என்ன செய்ய.. வாங்கி வரும்வழியில் யாரும் பார்க்காவண்ணம் தூர எறிந்து வந்தேன்.. இருந்தாலும் அட்டையில் அது பற்றிய அலங்கரிப்பு வேறு.. இதை வாங்கும் பெண்கள் என்ன நினைப்பார்கள்.. சாதாரண Medical Shop-ல கூட வெளியில் தெரியாவண்ணம் தான் தருவார், இங்கே கூவி கூவி விற்பனை ..
"வாங்கிவிட்டீர்களா, இந்த வாரம் உங்கள் ஆனந்த விகடன் உடன் அழகிய 'Sanitary Napkin' இலவசம்.. இவர்களுக்கு இது கேவலமாக தெரியாதோ.. அந்த அளவுக்கு வக்கத்துப்போய் நம் பெண்டிர் அல்லவே..
"நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை..." வேற என்ன சொல்றது.. கமல் சொல்ற மாதிரி 'இப்டி எலாம் போனா டமில் எப்டிய்யா வாலும்' ...
சுருக்கமாக இந்த வார விகடன் 'இதழ்' ரொம்ப அலங்கரிப்பட்டு, பாலியல் தொழில் போகும் பெண் போல இருந்தது..