வாழ்ந்து கெட்ட அந்த குடும்பத்தில் சமீபத்தில் எல்லோரும் ஒன்று கூடி ரொம்ப நாள் ஆச்சு.. வழக்கமா ஏதாச்சும் கல்யாணம் கச்சேரிக்கு மட்டுமே வரும் பெரியவனும் சின்னவனும் கூட இன்னிக்கு அவங்க அவங்க குடும்ப சகிதமா வந்தாச்சு.. அவரைப் பொறுத்தவரை பெரியவனும் சின்னவனும் தருமரும், பரதனும் மாதிரி ... நடு வீட்ல அந்த பெரியவரு இருக்காரு.. அணையும் விளக்கு
அவர் கண்களுக்கு எல்லாரும் எமதர்மனா எமதூதர்களா தெரிஞ்சாங்க ..
அவன் பெரியவன்... மாணிக்கம் .. சென்னைக்கு புலம் பெயர்ந்த பிறகு 'மாணிக்'.. வாழ்ந்து கெட்ட குடும்பத்தை திரும்ப வாழ வைத்தவன் .. அப்பா செல்லம்...
அன்று ஒரு நாள்... பொன்மாலை பொழுது..
அப்பா, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..
'தேவர் மகன்' சிவாஜி மாதிரி பக்கத்துல இருக்க நாற்காலி-ஐ காட்டி இருக்க சொல்லி.. ம்ம்ம் சொல்லுப்பா என்றார்..
"என்னோட வேலை காரணமா இனி நான் அடிக்கடி அமெரிக்கா போகணும் .. இவ இடுப்புல ஒன்னும் கைல ஒன்னும் வெச்சிருக்கா.... நீங்களும் அம்மாவும் வந்து இருந்தா கொஞ்சம் சௌகரியமா இருக்கும்..."
"ம்ம்.. எவ்ளோ நாள்.."
"மூணு - நாலு மாசம் அகும்ப்பா..."
(பாவமா) அவ்ளோ நாள் அங்க எப்படி ஐயா அங்க இருக்க முடியும்... (அவருக்கு அடி வயித்துல புளி கரைச்சாச்சு... அவ்ளோ பெரிய ஊர்ல.. தீப்பெட்டி வீட்ல.. பேசி சிரிக்க கூட ஆள் இல்லாத ஊர்ல... ஐயோ 3 -4 மாசமா...)...
"அவ வீட்ல அவங்க தாத்தா இருக்காருல்ல, அதான் அவங்க அம்மாவும் வர முடியல பா.. நீங்களும் அம்மாவும் வந்தால் கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்... "
"அம்மா வந்து உன் மனைவிக்கு பணிவிடை செய்யனுமா டா!!!!" ... கேட்க தான் தோனுச்சு ... ஆனால் கேட்கவில்லை.. குடும்பத்தை காப்பாற்றிய குலசாமி-ஐ எப்படி கேள்வி கேக்குறது...
"பொங்கல் எல்லாம் வருதே ராசா... பொங்கல் வரை நான் இருக்கேன்.. பொங்கலுக்கு ஊருக்கு போறேனே ... உன் மாமனார வர சொல்லேன்..."
"கேட்டு சொல்றேன் பா.."
அன்று பொங்கல்... "ஏண்டி, ஊருக்கு Phone பண்ணியா.. பொங்கல் வெச்சாங்களா .. "
ஊர்ல தடல்புடலா மூணு அடுப்புல பொங்கல் வெச்ச கை.. இன்னிக்கு எலெக்ட்ரிக் குக்கர்ல, அதுவும் வெறும் சர்க்கரை பொங்கல் மட்டுமே ... கலங்கிய கண்களோட "ம்ம்.. பால் நல்லா பொங்குச்சாம்..."
"கிராமத்துல இருந்து மரியாத செய்ய வந்தாங்களா.. அவங்களுக்கு சாப்பாடு போட்டங்களா.."
"ம்ம்.. ரொம்ப முக்கியம்.."
தொழிலில் எல்லாரும் ஏமாற்றிவிட்ட பிறகு அவருக்கு கிடைக்கும் ஒரே மரியாதை அது தானே .. எப்படி முக்கியம் இல்லாம இருக்கும்...
"ம்ம்ம்ம்"
(சில மாதங்களுக்கு பிறகு...)
"அப்பா... "
"ம்ம் சொல்லு ராசா"
"இப்ப மறுபடியும் அமெரிக்கா போகணும் பா"...
"!()#**&*&*##**!!!???!?!?" எப்போ...
"வர்ற 15ம் தேதி"
"ஊர்ல நிறைய கல்யாணம் இருக்கு பா.., நீ அவங்க அம்மாவை வர சொல்லிக்க... எல்லாமே முக்கியமான கல்யாணம்.. தவிர்க்க முடியாதுப்பா"...
"ம்ம்ம்ம்"
(இன்னும் சில மாதங்களுக்கு பிறகு.. இடம்: தமிழக தலைநகர்)
"எலே மாணிக்கம், உன் சின்னமக சொல்ல சொல்ல கேட்காம கடல்ல இறங்கி ஆடி முழுக்க நனைஞ்சு போயிட்டா டா"
"அம்மா.. நீ இங்க சும்மா 10-15 நாள் தான் இருக்கீங்க .. சளி காய்ச்சல்னு வந்தா யாரம்மா பாக்குறது.. நான் ஆபீஸ் வேலைய பார்ப்பேனா இல்லை இதை பார்ப்பேனா.. என்னம்மா நீ "....
"இதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா" .. கேட்கத்தான் தோணிச்சு.. ஆனால் குடும்பத்தை காப்பாற்றிய குலசாமி-ஐ எப்படி கேள்வி கேக்குறது...
"இதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா" .. கேட்கத்தான் தோணிச்சு.. ஆனால் குடும்பத்தை காப்பாற்றிய குலசாமி-ஐ எப்படி கேள்வி கேக்குறது...
அதுக்கு பிறகு அவர்கள் எங்கும் போகவில்லை.. சென்னையிலேயே வனவாசம் ..
(இன்று..)
தனித்து விடப்பட்ட தனது கடைசிக்காலம்... காணாமல் போன அங்கீகாரம் .. தொலைந்த நண்பர்கள்.. மனைவி.. மக்கள்.. பேரக்குழந்தைகள் .. அனைவரும் கானல்நீராக கண்களில் தெரிய .. என்றும் அல்லாத தெளிவான முகத்துடன் .. கண்ணீர் வழிய மாணிக்கத்தை பார்த்து கை அசைத்தார்..
தந்தையின் பாசமிக்க நாட்களை எண்ணி அவர் கை பிடித்து .. "சொல்லுங்கப்பா .. "
"அம்மாவை நல்லா பார்த்துக்க.. அவள இங்கயே விட்ருடா.. சென்னைக்கு எலாம் வேணாம்.. உன்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய், போதும்... அவ நிம்மதி இங்க தான் இருக்கு.."
இப்படி தான் சொல்ல நினைச்சாரு... சொல்லல ... குடும்பத்தை காப்பாற்றிய குலசாமி-ஐ எப்படி கேள்வி கேக்குறது...
"நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை "
0 comments:
Post a Comment