Pages

Saturday, April 3, 2010

Guna – Appanendrum Song


This is one of my favorite song with very intense lines.,
அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும்  பெண்ணும்
கொட்டி  வச்ச  குப்பையாக  வந்த  உடம்பு
ஞானப்பெண்ணே  குப்பையாக  வந்த  உடம்பு
அது  புத்தனென்றும்  சித்தனென்றும்  பித்தனென்றும்
ஆவதென்ன சக்கையாக  போகும்  கரும்பு
ஞானப்பெண்ணே  போகும்  கரும்பு
பந்த பாசச்செற்றில்  வந்து  விழுந்த  தேகம்
எந்த  கங்கை  ஆற்றில்  இந்த  அழுக்கு  போகும்
அப்பனென்றும் ….. (அப்பனென்றும்)
குத்தம் குறை  ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா
சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தானடா
சிவனைக்கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்தி கேட்ட மூடர்க்கேன்றும் ஞானப்பார்வை  ஏதடா
ஆதி முதல் அந்தம் உன் சொந்தம்
உன்  பந்தம்  நீ உள்ளவரைதான்
வந்து வந்து கூடும் கூத்தாடும்
விட்டோடும் ஓர் சந்தைக்கடைதான்
இதில் நீ என்ன நான் என்ன
வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத்தள்ளு
அப்பனென்றும் ….. (அப்பனென்றும்)
கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேர்த்து வச்ச பாவம் யாவும் தீரனும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனதாரடா
தட்டுக்கெட்டு ஓடும் தள்ளாடும்
எந்நாளும் உன் உள்ளக்குரங்கு
கட்டுப்பட கூடும் எப்போதும்
நீ போடு மெய்ஞான விலங்கு
மனம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக அஞ்ஞானம் அற்று விழும்
அப்பனென்றும் ….. (அப்பனென்றும்)

2 comments:

Nandhini said...

Unmai thaan thalaiva.........indha enaku theriya vachadhuku manamaarndha nandrigal......
enna vaarthaigal...vilai madhippatra sorkal.......

Vela said...

Thanks

Post a Comment