Pages

Monday, October 10, 2011

Guna - அபிராமி அந்தாதி - A Controversy Song.. !!!



அபிராமி அந்தாதி - A Controversy Song..


I love this day on making such a wonderful hunt about my longtime wish to write about the song from Guna movie 'Partha Vizhi'.. This song is being so criticized because of the words that is being used... But when realized about the inner meaning, its really amazing.. a complete treat.. The words were so awesome as I neither can't demonstrate, nor put into clear meaning. Someone who preaches 'Anthathi' should play a role on this...


Now lets move on to the topic... 

அபிராமி அந்தாதி 
ஆசிரியர்: 'அபிராமி பட்டர்'

ஒருவர் அபிராமி பட்டரிடம் இது என்ன நாள் என்று கேட்க அவரோ 'பௌர்ணமி' என்று சொல்லி இருக்கார்.. எல்லோரும் எள்ளி நகையாட கடைசில அரசரிடமும் அதே பதில்.. அரசரும் கோபம் கொண்டு 'இன்று பௌர்ணமி' இல்லை என்றல் 'அபிராமி பட்டறை' கொன்றுவிட ஆணை இட்டு சென்று விட்டார்...

அபிராமி பட்டர், தேவி அபிராமியிடம் 'உன்னை நினைந்தே நான் உலகை மறந்து இவ்வாறு ஆனேன்'.. நீயே வந்து காக்க வேண்டும் என்று கூறி பாடல் பாட துவங்கினார்.. இறுதியாக தேவி அபிராமி தன் காதில் உள்ள தோடை கழற்றி விண்ணில் எரிய விண்ணெங்கும் ஒளி பரவ அபிராமி பட்டர் பிழைத்தார்... 

அந்தாதி என்றல் என்ன? அந்தாதி என்றல் எந்த வார்த்தையில் முதல் பாடல் முடிகிறதோ அதே வார்த்தை கொண்டு அடுத்த பாடல் துவங்க வேண்டும்.. இதுவே அந்தாதி.. 

Now.. Lets move onto the song., 

இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, முது 
வடங்கொண்ட கொங்கை - மலைகொண்டு இறைவர் வழிய நெஞ்சை 
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின் 
வடம் கொண்ட அல்குல் பணிமொழி - வேதப் பரிபுரையே.. 

பாடல் - 42 

பொருள்:

அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில்(மார்பு) புரளுகின்றது.. உம்முடைய தனங்களோ ஒன்றுகொன்று இடமின்றி பருத்து உள்ளது.. இந்த கொங்கைகளாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனதை ஆட்டுவிக்கின்றது.. தேவியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குல் கொண்டவளே.. குளிர்ச்சியான மொழி கொண்டவளே.. வேதச் சிலம்புகளை திருவடிகளில் அணிந்து கொண்டவளே தாயே.. !!!

Are you disgusted with the direct meaning.. If so, change your mind.. It is not a description or an poem about women's anatomy.  If we dig a more about the meaning, here are the points...

1] தனங்களின் அழகு
2] அவை எவ்வாறு சிவனை ஆட்கொள்கிறது
3] அல்குல் (You may have refer google)...
4] குளிர் மொழி
5] வேதங்களே அணிகலன்கள்...

பெண்மையின் அழகே தனங்கள், அவை பாலூட்டும் போது பெண்மை நிறைவு பெறுகின்றன.. அல்குல் இந்த இடத்துல 'தாய்மடியாக' உவமை  எடுத்துகொள்க.. குளிர்மொழி - தாலாட்டு.. வேதங்கள் அணிகலன்களாக உள்ளபோழ்து குழந்தையின் பாதுகாப்பு உறுதிப்படுகின்றது.. 

So, சுருக்கமாக எவரெல்லாம் தேவி அபிராமியை தாயாக ஏற்றுக்கொள்கிறார்களோ அவருக்கெல்லாம் தேவியின் அருள் கிட்டும் என்பதே பாடுபொருள்.. 

I knew this is a very sensitive lines and I believe I made a decent translation over this., I made my best effort in collecting data about this. Kindly bare with me and if possible correct me, if there were any., 




Saturday, October 8, 2011

படித்ததில் பிடித்தது - சொல்வனம்




விடாமல் விழும் அருவியை 
ஆச்சர்யமாக பார்க்கிறாள் 
ஒருநாள் விட்டு ஒருநாள் 
குழாயில் தண்ணீர் வரும் 
நகரத்திலிருந்து வந்த
குடும்பத் தலைவி.
குளித்துவிட்டுத் 
திரும்பும்போது 
குழாயை மூடாமல்
கிளம்புவதைப்போல்
தோன்றுகிறது அவளுக்கு.
ஆளே இல்லாதபோதும் 
கொட்டிக்கொண்டிருக்கும் 
நீரின் ஓசை அவளைப் 
பைத்தியமாக அடிக்கிறது !!!

Saturday, October 1, 2011

காலையும் பகலும்



I am not a Tamil-Pro.. I just scribble something out of my own choice that I pick when I am hunting down for something else... This is that kind of hunt.. one of my favorite...





காலையும் பகலுங் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப் 
பொழுதிடை தெரியிற் பொய்யே காம 
மாவென மடலொடு மறுகிற் றோன்றித் 
தெற்றெனத் தூற்றலும் பழியே 
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.
    
                - குறுந்தொகை - 32 

This one tends me to do a whole lot of research about the words being used.... காட்சி பொருள், கருப்பொருள் எல்லாம் பேசும்முன், First lets look into these lines...

காலையும் பகலுங் கையறு மாலையும் 
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்

காலை, பகல், மாலை, யாமம், விடியல்.. இவ்ளோ தான.. இல்ல...ஒவ்வொரு 4 மணி நேரமம் வேற வேற...
மாலை - 6 - 10;                              யாமம் - 10 - 2
வைகறை - 2- 6;                              காலை - 6 - 10
பகல் - 10 - 2;                               பிற்பகல் - 2 - 6

"வைகறை துயில் எழு" 

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய் - குறள் - 1227

Now lets move on to the next word
மாவென மடலொடு - மடலேறுதல் என்றால் என்ன செய்வார்கள்?  குதிரை போல பனைமடல் மேல் ஏறிக்கொள்வார்கள். எருக்கம்பூவைச் சூடிகொள்வார்கள். பிறர் சிரித்தாலும் மதிக்க மாட்டார்கள். 
So why should they do like that? மானம் போனால் உயிர் போச்சு. அப்படி வாழும் காலத்துல ஏன் அப்படி செய்யணும்.. தான் கொண்டுள்ள காதல் தான் சிறந்தது.. ஊர் கேலி பேசினாலும் போதும், தன் காதல் தான் வேண்டும்.. தான் தலைவி இன்றி வாழ இயலாது என்பதாக எடுத்து கொள்ளலாம். I know there is a lot to discuss on this topic, but I am leaving the debate for a later time ...

Now lets go into the meaning of the poem.. This are the words from Thalaivan to Thozhi..

காலைப்பொழுதும், உச்சிப் பொழுதும், பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைப் பொழுதும், ஊரினர் துயில்கின்ற இடையிரவும், விடியலும் என்ற இச்சிறு பொழுதுகள் இடையே தோற்று மாயின், அத்தகையோருடைய காமம் உண்மை அன்று; பிரிவு வருமாயின், அப்போது, பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தை ஊர்ந்து, தெருவில் வெளிப்பட்டு, யாவரும் இன்னாளால் இவன் இச் செயல் செய்தானென்று தெளியும்படி தலைவி செய்த துயரைப் பலர் அறியச் செய்தலும் பழிக்குக் காரணமாகும்; அது செய்யாது உயிரோடு வாழ்ந்திருத்தலும் பழிக்குக் காரணமாகும்.


Tuesday, September 27, 2011

தரித்திரம்





கவி கற்றவர்க்கும் கணி கற்றவர்க்கும் கம்மாளருக்கும்
ஓவி கற்றவர்க்கும் உபாத்திகளுக்கும் உயர்ந்த மட்டும் 
குவி வைக்கும் ஓட்டர்க்கும் கூத்தாடிகட்க்கும் குருக்களுக்கும் 
இவ ரெட்டுப் பேர்கட்க்கும் நீங்காத் தரித்திரமே 

- வீரராகவர்

Wednesday, September 21, 2011

குறிஞ்சிப் பாட்டு - மலர்கொத்து - பகுதி 1

Its been a long ago blogging because of too much of doing nothing ;) .,
'குறிஞ்சிப் பாட்டு'.. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துல சூர்யா 100 பூ பேரு சொல்வரே.. அதான்.. but எங்க படிச்சேன்னு மறந்துட்டேன்.. இப்ப தான் கண்டுபுடிச்சேன்.. 




வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,75
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை,80
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,95
அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,
மால், அங்கு, உடைய மலிவனம் மறுகி,
வான் கண் கழீஇய அகல் அறைக் குவைஇ,

Friday, June 3, 2011

!!! புலம்பல் !!!





பிறப்பும் இறப்பும் அற்றுப் 
பேச்சும்அற்று மூச்சும்அற்று
மறப்பும் நினைப்பும்அற்று 
மாண்டிருப்பது எக்காலம்?

Saturday, May 14, 2011

!!! பெண்மை !!!





ஆண்மை 
தந்த அல்லல் - பெண்மை 

Saturday, May 7, 2011

படித்ததில் பிடித்தது - காசி ஆனந்தன் பக்கம்..



ஆணாதிக்கம்
எப்படியும் இருக்கலாம்
ஆணிண் திமிர்
திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்
அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்

பால்
என்னைத் தெய்வம் ஆக்கினாய்
சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-
உன்பால் வேறுபாடு அழுத்தமானது
சிவனுக்கு பசுப்பாலும் சக்திக்குகள்ளிபாலும்


மாவீரன்
இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்;


அரண்

என் வலகையில் ஐந்துவிரல்கள்
உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல
அறையவும்தான்


இறுதியாக.. ஆனால் இறுதி அல்ல.. 



மனிதன்

இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்....


Wednesday, April 20, 2011

கறந்த பால் நீர் புகா





கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணெய் மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா 
விரிந்த பூஉதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா 
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே..



-- சிவாக்கியார் 
  


Sunday, March 6, 2011

பிழை



கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக் குண்டரைக் காமுகரைக் 
கொடும் பவமேசெயும் நிர்மூடர்தம்மைக் குவலயத்து
நெடும்பனைபோல் வளர்ந்துநல் லோர்தம் நெறியறியா
இடும்பரை ஏன்வகுத்தாய் இறைவாகச்சி ஏகமபனே ...
 
 


Monday, February 28, 2011

வாழ்க்கை





நின்றும் 
இருந்தும்
நடந்தும்
கிடந்தும்
கழியும் வாழ்க்கை...
  
  

Tuesday, February 1, 2011

நம் தமிழர்களை காப்பாற்ற உங்கள் பிளாக்கில் ஒரு சிறிய இடம் கொடுங்கள்





எங்கள் ஈழத் தமிழனை தான் ஜோடி போட்டுகொண்டு வேட்டையாடினிர் மீதமிருக்கும் என் தமிழனையாவது காப்பாற்றி தாரும் என்று நாங்கள் அழும் சத்தத்தை கூட கேட்க விரும்பாமல்  ஏ.சி ரூமில் படுத்து கொண்டு கவிதையும் அடுத்த படத்திற்கான கதையையும் எழுதி கொண்டு உல்லாசமாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கு நம் அழுகை சத்தத்தை கேட்க்கும் நோக்கில் உண்டாக்கியுள்ள www.savetnfisherman.org தளத்திற்கு நம் ஆதரவை தெரிவித்து அவர்களின் கரங்களை வலிமையாக்குவோம்.


இணைய தள முகவரி- savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman 
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form

நீங்கள் பிளாக் வைத்து இருந்தால் கீழே இருக்கும் இந்த கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கில் Design - Add a Gadget - Html Java/Script சென்று இந்த கோடிங்கை பேஸ்ட் செய்து உங்கள் பிளாக் சைடு பாரில் இந்த படத்தை தெரிய வைத்தால் இந்த செய்தி மேலும் பலரை சென்றடைய ஏதுவாக இருக்கும். நம் தமிழனுக்காக உங்கள் பிளாக்கில் ஒரு சிறய இடத்தை ஒதுக்கி கொடுக்கவும்

  • இப்படி இந்த பேனரை உங்கள் தளத்தின் சைடு பாரில் பதிந்தால் உங்கள் பிளாக்கில் வரும் வாசகர்களுக்கு அறிய உதவும்.
டிஸ்கி 1: உங்கள் பிளாக்கில் ஒரு பதிவை ஒரு கண்டனமாக தெரிவியுங்கள். டைப் செய்ய கடினமாக இருந்தால் மற்ற நண்பர்கள் போட்டுள்ள பதிவுகளை காப்பி செய்தாவது உங்கள் பிளாக்கில் பதிவிடுங்கள் ஒரு வழியாக தூங்கி கொண்டிருப்பதை போல நடித்து கொண்டிருக்கும் அரசியல் முதலைகளை எழுப்பினால் போதும்.
டிஸ்கி 2:  இது நண்பன் ஒருவனின் blog-il இருந்து தொடர்ந்தது.. அந்த sidebar வரவைக்க கொஞ்சம் முயன்று பார்த்தேன்.. முடியல.. வீட்டுக்கு போய் மீண்டும் முயன்று பார்கிறேன்..

Monday, January 31, 2011

குறள் மொழி



மானம்
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். - 961

பொருள்: கட்டாயமாக செய்யக்கூடிய செயல்களே ஆயினும் அவற்றால் தமது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைச் செய்வதை தவிர்த்திடல் வேண்டும்

Meaning: Though needed for your life in main,
               From mean degrading acts refrain...

Friday, January 28, 2011

பொருளெனக்கு தாராயோ?



புல்லரிடதிற்ப் போய்ப் பொருள் தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக் காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா 
பொருளெனக்கு தாராயோ?
- சித்தர் பாடல்

 
 
 
 

Sunday, January 23, 2011

படித்ததில் பிடித்தது - ஜீவானந்தம்


இன்று வித்தியாசமா ஒரு புக் கிடைச்சது... Actually, அது இப்போ உள்ள political situation ah  replicate ah இருந்தது.. So உங்களுக்காக,



காலுக்குச் செருப்புமில்லை
கால்வயித்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோமடா - என்தோழனே
பசியற்றுப் போனோமடா!

குண்டிக்கொரு துண்டுமில்லை
கொல்வறுமை தாளவில்லை
ஒண்டக் குடிசையில்லை - என்தோழனே
 உழைதிளைத்துப் போனோமடா!

நோய்நொடிகள் வெப்புலிபோல்
நூறுவிதம் சீறுவதால்
தாய்தந்தையர் பெண்டுபிள்ளை - என்தோழனே
சாய்ந்துவிழக் கண்டோமடா!

பாலின்றி பிள்ளைஅழும் 
பட்டினியால் தாய்அழுவாள் 
வேலையின்றி நாமழுவோம் - என்தோழனே
வீடுமுச் சூடும்அழும்!

கையிலொரு காசுமில்லை
கடன்கொடுப்பர் யாருமில்லை
செய்யும்தொழில் கிட்டவில்லை - என்தோழனே
திண்டாட்டம் கொள்ளுமடா!

வாங்கிய கடன்தீர்க்க
வக்கில்லை யானாலும்
ஏங்கி இறந்துன்னவா - என்தோழனே
எங்கள்மனம் கூசுதடா !

கொச்சைப் பிழைப்பறியோம்
கொலைதிருட்டு அறியோம்
இச்சப் பேச்சறியோம் - என்தோழனே
எத்தும் புரட்டறியோம்!


கோணல்மானால் திட்டங்களால் 
கோடிகோடி யாய்க்குவித்தே 
வீணர்சிலர் கொழுக்கக்கண்டோம் - என்தோழனே
வெஞ்சினம் பொங்குதடா !!

மாடமாளி கையவர்க்கு 
மன்னர்மகு டமவர்க்கு 
வாடவ றுமைநமக்கு - என்தோழனே
வந்திடில் வாழ்வெதற்கு?

ஒன்றுபட்டுப் போர்புரிந்தே
உயர்த்துவோம் செங்கொடியை
இன்றுடன் தீருமடா - என்தோழனே
இம்சை முறைகளெல்லாம்
 
செத்த பின் 2 லட்சம் பேர் வந்தாங்களாம், வேட்டி வாங்க கூட காசில்லாம, வைத்தியம் பார்க்க காசில்லாம இறந்திருக்காரு..  காமராஜர், M.G.R உதவி செஞ்சப்ப கூட வேணாம்னு சொல்லி இருக்காரு... எப்படி ஒரு மாணிக்கத்தை தொலைசிருக்கோம் பாருங்க...
 
 

Thursday, January 20, 2011

திருக்குற்றால குறவஞ்சி - A great numerical play

திருக்குற்றால குறவஞ்சி

குற்றாலம் - பெயரில் ஈர்க்கப்பட்டு கொஞ்சம் படிக்க தொடர்ந்தேன்.. மேலும் இதன் ஆசிரியர் எங்கள் நெல்லை வட்டம் மேலகரம்.. So, என்னுடைய ஆர்வத்தில் ஆச்சர்யம் இல்லை..

இனி பாடுபொருள்

குறவஞ்சியின் துவக்கத்தில் முருகன் பற்றிய பாடல் ஒன்று 'எண்களை' வைத்து அழக்காக பின்னப்பட்டுள்ளது காணீர்...  பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில் முடியும் பாடல் நம் தமிழின் பெருமை கூறுவதாக உள்ளது.
பன்னிருகை வேல் வாங்கப் பதினொருவர் படை தாங்கப் பத்து திக்கும்
நன்னவ வீரரும் புகழ மலைகளெட்டும் கடலேழு நாடி யாடிப்
பொன்னின் முடி ஆறேந்தி அஞ்சுதலை யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த்
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே
பன்னிருகை வேல் வாங்க (12)- பன்னிரண்டு கரங்களிலும் வேல்கொண்டு

பதினொருவர் படை தாங்க - பன்னிரண்டு கரங்களிலும் வேல் கொண்டதால்  பதினோரு படைக்கலங்களையும் பதினொருவர் தாங்கிக் கொண்டார்களாம்.

பத்துத் திக்கும் - நாம் அறிந்தது எண்திசைகள் தானே.. அப்புறம் எப்படி பத்து..??? எட்டுத் திக்குகளோடு மேலும் கீழும் உள்ள இரண்டு திக்குகளையும் சேர்த்து பத்து ஆனது.. (Smart Move la)..

நன்னவ வீரரும் புகழ - பத்துத் திசைகளிலும் புகழப் படுகின்ற வீரவாகு முதலான நவவீரர்கள் என்றும் முருகப் பெருமானின் ஆற்றல் புகழ

மலைகள் எட்டும் கடலேழும் நாடி யாடி - எட்டு மலைகளிலும் ஏழு கடல்களிலும் ஏறியும் தாவியும் குதித்தும் ஓடியும் ஆடியும் விளையாடுகின்ற

பொன்னின் முடி ஆறேந்தி - ஆறு தலைகளிலும் பொன்னாலான திருமுடிகளை ஏந்திக் கொண்டிருக்கும்

அஞ்சுதலை யெனக்கொழித்து - அஞ்சுதல் என்னும் வேண்டாத பண்பை என்னிடத்தில் இருந்து ஒழித்து

புய நால்மூன்றாய்த் - நால்மூன்று பன்னிரண்டு. பன்னிரண்டு தோள்களோடும்

தன்னிருதாள் - தன்னுடைய இரண்டு திருவடிகளையும்

தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே- தருகின்ற ஒருவனாகிய முருகப் பெருமான் தம்தமிழ் எம்வழி தந்தான்...
 
 
 

Sunday, January 16, 2011

அவர் உண்ட என் நலனே - I am nomore without Him..

This is yet another favorite.. One of the best correlated words... look at the words 'அவர் உண்ட என் நலனே' .. There is nothing more to say about the total agenda of the poem.. such a loving, painful words.. rite.!!!



112. குறிஞ்சி
கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள்ளர விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முறிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே
குறுந்தொகை

பிறர் கூறும் பழி மொழியை அஞ்சினால் என் காமம் மெலியும். பிறர் இழித்தல் அறும்படி அக்காமத்தை விடின் என்பால் இருப்பது நாணம் மட்டுமே. தலைவர் உண்ட எனது பெண்மை நலம்,  பெரிய களிறு உண்ணும் பொருட்டு வளைக்க, வளைந்து நிலத்திற்படாத பட்டையை உடைய ஒடிந்த கிளையை போன்றது - காண்பாய் தோழி ....

ஒரே வரியில் சொல்வதானால், ஊரார் அலர் அஞ்சி என் காமத்தை மிகுதியாக வெளிப்படுத்தாமல் உள்ளேன்..

This is in a conversation with the thalaivi with her reply to her friend, that 'I cant leave my thalaivan' and about her situation now..

"If I should fear for the public gossip, about my passion for him, it will become weak; If I give up my passion for him fully, only my womanly sense of modesty will stick on to me. My womanly beauty with which he has regaled himself, is now like a tree branch having its broken bark not fallen completely on the ground, but hanging insecurely when a mighty elephant bends down the tree in its search for its food.. understand this.. my friend... " 



Tuesday, January 4, 2011

பிரிவு அச்சம் - How would I leave my lady Love !!!

 
நீங்கின் சிறிது பொழுதுநில் லாஉயிர் நேரிழைக்குஇன்று
ஈங்குஇப் படிவைகில் எய்தும் பழிநமக்கு என்றுசிந்தித்து
ஓங்கல் சிலம்பிடை நின்றுஊச லாடி உயங்கும்நம்மைத்
தாங்கத் தகும்துணை யாதுகொல் லோஎன் தனிநெஞ்சமே ...
- அம்பிகாபதி





நான் பிரிந்தால் ஏந்திழை உயிர் நீப்பாள், அவ்வாறன்றி நான் இங்கேயே இருந்தால் பழி வந்து சேரும்.. இந்த நிலையில் ஊசலாடும் என்மதியைத் தாங்கி ஒருவழிபடுத்தும் துணை யாதோ??


(தலைவனும் தலைவியும் கலவி இன்பம் கண்டு தத்தம் வீடு திரும்பும் நேரம் கூடும் போது, தலைவியை விட்டு பிரியும் வழிகாணாது அஞ்சும் தலைவனது நிலை.. )


This is one of the best lines that I have read. This is a situation where Thalaivan wants to leave his lady love before someone catches them. But however, he can't leave her, thinking that she would feel ill of leaving. He is seeking help to give strength of leaving her lady love.. 
 
 

Sunday, January 2, 2011

சங்க இலக்கியம் - திணை வகை - III


முந்தைய  பதிவில் அகத்திணையின் பிரிவுகள் மற்றும் 'குறிஞ்சி', 'முல்லை',  'மருதம்' பற்றி பார்த்தோம்.. இது, அதன் தொடர்ச்சி.. சென்ற பதிவுக்கான தொடர்புக்கு "http://thapputhaalam.blogspot.com/2010/12/i.html" 
"http://thapputhaalam.blogspot.com/2010/12/ii.html" செல்லுங்கள்...


நெய்தல் திணை - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலமாகும்.. பெரும்பொழுது இளவேனில் மற்றும் முதுவேனில். சிறுபொழுது நண்பகல் ஆகும்.. வருணன் ஆகிய தெய்வம் முதலாக கடல் ஆடுதல் தொழில் நெய்தல் திணைக்கு உரிய கருப்பொருள் ஆகும்...


காமந் தாங்குமதி என்போர் தாமç
தறியலர் கொல்லோ வனைமது கையர்கொல் 
யாமெங் காதலர்க் காணே மாயிற் 
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் 
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல வில்லா குதுமே.  - குறுந்தொகை

(தலைவன் பிரிந்த காலத்தில். "நீ ஆற்றி இருத்தல் வேண்டும் என்ற தோழிக்கு முன்னிலைப் புறமொழியாக. "காமத்தின் இயல்பு அறியாத வன்கண்ணர் அதனைத் தாங்கி ஆற்ற வேண்டுமென்கின்றனர்" என்று தலைவி கூறியது.) 

பாலைத் திணை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

வறண்ட பகுதியும் அது சார்ந்த இடமும் பாலைத் திணைக்கு உரியவை. பெரும்பொழுது இளவேனில், முதுவேனில்; நண்பகல் சிறுபொழுது.. சமயமடந்தை நிலத்திற்குரிய கடவுளாக கருதப்படுகிறார்..

குறிஞ்சியும் முல்லையும் மழையின்றி பல ஆண்டுகள் இருப்பின் வன்பாலை ஆகும்: அவை மீண்டும் மலைவளம் பேரியின் முறையே குறிஞ்சியும் முல்லையும் ஆகும்;

மருதமும் நெய்தலும்  மழையின்றி பல ஆண்டுகள் இருப்பின் மென்பாலை ஆகும்: அவை மீண்டும் மலைவளம் பேரியின் முறையே மருதமும் நெய்தலும் ஆகும்; எனவே பாலைக்கு என தனியே நிலம் கிடையாது..



அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்
உரவோ ருரவோ ராக
மடவ மாக மடந்தை நாமே. - குறுந்தொகை - 20

தன்னுடைய அன்பை விடிற்று பொருள்வயிற் பிரிந்த தலைவன் செய்கை அழகன்று என்று தலைவி தோழிக்கு உரைத்தது..

இவை தவிர கைக்கிளை மற்றும் பெருந்திணைஆகிய திணை வகைகள் முறையே ஒருதலைக் காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் குறிக்கின்றன. இதனால் இவை தமிழர் வாழ்வியலில் பெருமைக்கு உரியனவாகக் கருதப்படுவது இல்லை. எனவே அவை பற்றி நானும் ஏதும் விரிவாக விளிக்கவில்லை..